திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சர்க்கரை நோய் 7 அறிகுறிகள்


98 சதவிகித இந்தியர்களுக்கு, அவர்களின் தவறான வாழ்க்கைமுறையின் காரணமாகத்தான் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளது என்கிறது, ‘இந்திய சர்க்கரை நோய் மருத்துவர்கள் கூட்டமைப்பு’. சர்க்கரை நோய் பற்றிய பயம் இருந்தாலும், போதிய விழிப்புஉணர்வு இல்லாததால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். டைப் 2 சர்க்கரை நோய் 30 வயதுக்கு மேல்தான் வரும். அந்த நேரத்தில், உடல் எடையைக் குறைத்தல், கட்டுக்குள் வைத்திருத்தல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு என்று கவனமாக இருந்தால், நிச்சயம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். மேலும், சில அறிகுறிகளைத் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் ஆரம்பகட்டத்திலேயே அதாவது, ப்ரீடயாபடீஸ் நிலையிலேயே கண்டறிந்து, சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
அதிக தாகம்
சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறி, தாகம். வழக்கத்துக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். டாக்டர்கள் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்கிறார்கள். நாமும் இப்போது நிறைய தண்ணீர் குடிக்கிறோமே என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. திடீரென்று நம்மையும் அறியாமல் அதிக தாகம் எடுத்து, நிறைய தண்ணீர் குடிக்கிறோம் என்றால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, அதை வெளியேற்ற நம்முடைய சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. இதை ஈடு செய்வதற்காக, தாகம் அதிகரிக்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையை வெளியேற்ற, சிறுநீரகம் முயற்சிக்கும்போது, உடலில் உள்ள நீரின் அளவு குறைகிறது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவு சிறுநீர் கழிக்கச் சென்றால், தூக்கத்தின் நடுவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
உடல் எடை குறைதல்
சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்றால், இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை அல்லது அதன் செயல்திறன் போதுமான
தாக இல்லை என்று அர்த்தம். செல்களுக்கு குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை ரத்தத்திலேயே இருப்பதால், எந்தக் காரணமும் இன்றி உடல் எடை தானாகக் குறைய ஆரம்பிக்கிறது.
அதிகப் பசி
டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்திறன் குறைந்துவிடுகிறது. இதன் மூலம் செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கணையமானது இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகிறது. இன்சுலின் அளவு அதிகமாக இருக்கிறது. இது, மூளைக்கு இன்னும் குளுக்கோஸ் தேவை உள்ளதாக சிக்னல் செய்கிறது. இதனால், பசி எடுக்கிறது.
வாய் உலர்தல்
சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சில் சுரப்பு குறைவதால் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படும். சில மருந்துகள் எடுப்பதன் காரணமாகவும் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படலாம். வாய் உலர்தல் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
அதிகப்படியான சோர்வு
நம் உடலில் உள்ள செல்கள்தான் குளுக்கோஸைப் பயன்படுத்தி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. செல்களுக்கு போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்கவில்லை, நீர்ச்சத்தும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது எனில், உடலில் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறைவதால், தலைவலியும் ஏற்படுகிறது.
பார்வை மங்குதல்
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கண்ணில் ரெட்டினா பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பார்வை மங்கலாகும். இவர்கள், சர்க்கரை நோய் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவதன்மூலம், ஆரம்பநிலையிலேயே இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். காலில் மதமதப்பு அல்லது காலில் ஊசி குத்துவது போன்று சுறுக்சுறுக்கென வலி, காயங்கள் நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்த பெண்களுக்கு பிறப்பு உறுப்பில் நமைச்சல், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டால் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்!


நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும், முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும், 83 சதவீத தண்ணீரால் ரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய தண்ணீரை, வெறும் வயிற்றில் குடிப்பதன் வாயிலாக, பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்: அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது, குடல் சுத்தம். தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலே, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் முற்றிலும் வெளியேறிவிடும்.
பசியை தூண்டும்: தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில், தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
ரத்த செல்கள் உற்பத்தி: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால்
ரத்தத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், உடல் எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்: பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து, குறைவாக இருப்பதால் அடிக்கடி தலைவலி ஏற்படும். இவர்கள் தினமும் அதிகாலையில், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலி குறையும்.
அல்சரை தடுக்கும்: காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடை குறைப்பு: எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமம்: குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால், சருமம் அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழை!


கொத்தமல்லி என்றதும் தனியா நம் நினைவுக்கு வரும். தனியாவுக்கென்று நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளதுபோலவே கொத்தமல்லித்தழைக்கும் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. அன்றாட சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்த மல்லித்தழையை தனியாக துவையல், சட்னி போன்ற வடிவங்களில் செய்து சாப்பிட்டால் நிறைய பலன்கள் உண்டு. சிறுவயது முதல் கொத்தமல்லித்தழையை துவையல் போன்ற வடிவங்களில் சாப்பிட்டு வருவதால் பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும். வாயில் புண் ஏற்பட்டால், கொத்தமல்லித்தழையுடன் தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால்… புண் சரியாகும். இதேபோல் வயிற்றுப்புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு ரத்தத்தை சுத்திகரிப்பதில் கொத்தமல்லித்தழை முக்கிய பங்காற்றுகிறது.

நெய்யில் கொத்தமல்லித்தழையை வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால், அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் ‘டானிக்’குக்கு இணையான பலனைத் தரும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாதத்துடனோ அல்லது வேறு வடிவங்களிலோ கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கொள்வதால், நாளடைவில் பார்வை சரியாகும். மலச்சிக்கல், உடம்பு வலி உள்ள வர்கள் கொத்தமல்லித்தழையுடன் வெற்றிலை சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் பிரச்னை சரியாகும்.

முகப்பொலிவிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் … அரிசி கழுவிய தண்ணீர்


அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய
நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை (Elasticity ) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.  
அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்ட வேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந் தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கு வதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.  அரிசி கழுவியநீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சருமசெல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கிய மாகவும் பொலிவோடும் இருக்கும். 

அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மை யின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிதுநேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.  இதனால் கூந்தலின் மென்மைத் தன்மை அதி கரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போ ஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தொப்பை குறைய வேண்டுமா


உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள்.
சரிவிகித நீர்ச்சத்து: அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.
தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி: தொப்பை இருக்கிறது என்பதற்காக, உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்தானது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே சரியான நேரத்திற்கு, சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக அளவில் எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக்கொண்டு இருப்பதும் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உற்சாகமான நடை: தொப்பை வயிறு குறைய, தினசரி அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க வேண்டும் என்பது, உணவியல் நிபுணர்களின் அறிவுரை. இது இதயத்திற்கும் இதமான ஒரு உடற்பயிற்சி. நடைபயிற்சியானது தொப்பையை கரைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் நடத்திச் செல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோல் நீச்சலானது உடலை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
பழங்கள், காய்கறிகள்: நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளதால் உடலின் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன.
செயற்கை குளிர்பானங்கள்: வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது.
எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சனி, 18 ஜூலை, 2015

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல்.



பெருங்காயம், நம் வீட்டில் அன்றாடம் சமையல் செய்யும்போது உண வோடு சிறிது பெருங்காயத்தை சேர்ப்ப‍ர். இது சுவைக்காக
மட்டுமல்ல‍. ஆரோக்கியத்திற்காகவும் தான். இந்த பெருங்காயம் பெண் களுக்கு ஒரு சிறந்த மாமருந்து என்றாலும் இதன‌ கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.
மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாத விடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க் கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டே வருவது நல்லது. கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாத விடாய் வராமல்,  வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும்.

வியாழன், 18 ஜூன், 2015

சுகப்பிரசவத்திற்கு


பேரீச்சம் பழம், குடும்பத்தின் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான பழம். கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.
நல்ல தரமான கொட்டையில்லாத பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு அப்பழங்கள் மூழ்கும்படி, சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்.
பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது,
பேரீச்சம்பழம். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.
முதியோருக்குப் பேரீச்சம் பழம் மிகச் சிறந்தது. பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி குணமாகும். பாலில் வேகவைத்து, பருகி வந்தால் இதய நோய்கள் வரவே வராது. இரவில் பேரீச்சங்காய்கள் மூன்றை நீரில் ஊறப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் காய்களைச் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை வெளியில் எடுத்து விடும். உயர் ரகமான அஜ்வா பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், நல்ல உடற்கட்டைப் பெறுவதுடன், எந்த நோயுமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

செவ்வாய், 9 ஜூன், 2015

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்


பழங்கள் – இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையும் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:
எலுமிச்சை
✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை, அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால், உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க, எலுமிச்சை பழத்தை கடித்து, சாற்றை உறிஞ்சி குடித்தால், உடனே களைப்பு தீரும்.
✔ கபம் கட்டி, இருமலால் கஷ்டப்படுகிறவர், ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி நலம் ஏற்படும்.

திராட்சை
✔ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த மருந்து. தள்ளிப் போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில், சிறிது சர்க்கரை சேர்த்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
பேரீச்சை
✔ தினமும், இரவில் படுக்க செல்லும் முன், ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தையும் உண்டு வந்தால், உடல் பலம் பெறும். ரத்த விருத்தியும் உண்டாகும்.
✔ தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்க, தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.
ஆரஞ்சு
✔ ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி மற்றும் பி-2 உள்ளன. இதில், சுண்ணாம்புச் சத்தும் அதிகம். பல நாள் வியாதியில் இருந்து எழுந்தவர்களுக்கு, இது இயற்கை அளித்த சத்து மருந்து.
✔ இரவில் துாக்கமில்லாமல் கஷ்டப்படுபவர், படுக்க போவதற்கு முன், அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால், செமையாக துாக்கம் வரும்.
வாழை
✔ மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்
பட்டவர், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி உண்டாகும்.
✔ கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், தினசரி உணவில் செவ்வாழைப் பழம் வேளைக்கு ஒன்று வீதம், 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
பலா
✔ இதில் வைட்டமின் ஏ மற்றும் உயிர்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ‘ஏ’க்கு, தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால், உடலில் நோய் தொற்றாது.
பப்பாளி
✔ ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. பல் தொடர்பான குறைபாட்டுக்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை அதிகரிக்கவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக்கவும் பப்பாளி கை கொடுக்கும்.
✔ பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக் கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து உள்ளது. பப்பாளி பழம் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமிகள் தங்குவதை அது தடுத்து விடும்.
மாதுளை
✔ மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர், தொடர்ந்து மூன்று நாள் மாதுளம் பழம் சாப்பிட்டால், குணம் பெறலாம்.
✔ வறட்டு இருமல் உள்ளவர் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கும் மாதுளம் பழம் ஏற்றது.
கொய்யா
✔ எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் உண்பது நல்லது. விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால், வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால், அதை உடனே கொன்று விடும்.
அன்னாசி
✔ உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அன்னாசிப்பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை, சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து, தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும்; 40 நாட்களில் ரத்தம் அதிகரித்திருக்கும்.

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .


கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க சில எளிமையான
இயற்கை வைத்திய முறையைக் கையாண்டால் நிச்ச‍யம் அவர்களுக்கு வாந்தி வருவது முற்றிலும் நிற்கும்.
புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக் கொள்ளவு ம். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் நின்றுவிடும்.

குறிப்பு
இந்த வைத்தியம் சர்க்கரைநோயுள்ள‍ கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தத‍ல்ல‍

ஞாயிறு, 31 மே, 2015

கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்களுக்கான



பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 85,000 பெண்கள் உயிரிழந்து
கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியி ன் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த‍ பெண்கள், இர ண்டாவது குழந்தைக்கு சிறிது இடைவெளி வேண்டும் என்று நினைத்து என்ன‍தான் கருத்தடை சாதனங்களை பயன்படுத் தினாலும், சிலநேரங்களில் எதிர்பாராத நேரத்தில் கருத்த‍ ரித்து விடுகிறது.
அப்ப‍டிகருத்தரிக்கும்போது, அக்கருவை கலைக்க முற்படு வார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும்போது, எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும்போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரி யானமுறையைக் கையாளவேண்டும்.  இல்லா விட்டால், அது விபரீதமாகிவிடும். ஆகவே கருக்கலைப்பு செய்ய நினைப்போருக்கு சில இயற்கை ப் பொருட்களைக் கொடுத்துள்ளது. வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருட்கள் கருக்கலைப்பை ஏற்படுத்தும். இப்போது கருக்கலைப்பிற்கு உதவும் வைட்டமின் சி நிறை ந்த உணவுப் பொருட்கள் எவையென்று பார்ப்போம். 

குறிப்பு: வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும் போது, தினமும் 6,000 மி.கி அளவுக்கு மேல் எடுக்கக்கூடாது.
ஒரு கட்டு பார்ஸ்லி கொண்டு டீ போட்டு குடித்தால், எதிர் பாராதவிதமாக உருவான கருவை கலைத்துவிடலாம். அதி லும் இதனை தினமும் ஒரு நாளைக்கு கொஞ்சம் கொஞ்ச மாக சாப்பிட வேண்டும்.
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்ப டுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.
ர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அன்னா சிப் பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதா லேயே தான். 

பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திரு ப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலு ம் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும். 

கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத் தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும் பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இத னை தினமும் ஒரு கையளவு பச்சை வேர்க் கடலை சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.
எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்ட வை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள்.
சிலபெண்களுக்கு வலுவான கருவாக கருத்தரித்திரு ந்து, மேற்கூறிய முறைகள் பயன்தரவில்லை என்றா ல், அவர்கள் முறையாக மருத்துவரை அணுக வேண்டியதுதான்.

முகப்பொலிவின் ரகசியம்

Posted By Muthukumar,On May 31,2015

மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்கள் எளிமையாக கிடைக்கும் வகையில் இருப்பினும், அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலிகை குணங்களை நாம் அறிவதில்லை. இன்னும் சில பொருட்களை, எந்தெந்த உடல் பிரச்னைகளுக்கு பயன்படுத்த வேண்டும்
என்பது தெரியாததால், அதனை பயன்படுத்துவதில்லை. இவ்வாறு எளிமையாக கிடைக்கும் மருத்துவ பொருட்களில் ஜாதிக்காயும் ஒன்று.
ஜாதிக்காயை தூளாக அரைத்து அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சூடு குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வழக்கமாக, தூக்கமின்மை பிரச்னைகள் என்றாலே, ஆயுர்வேதத்தில் ஜாதிக்காயை பரிந்துரைப்பதுண்டு.
ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால், நன்றாக உறங்கலாம். மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது. முகத்தில் ஏற்படும், பருக்கள், கிருமிகளை அறவே போக்கும் தன்மை இதற்கு உண்டு. ஜாதிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவினால், கிருமிகளை முழுமையாக நீக்கிவிடும்.
முகத்தை பொலிவு பெற செய்வதற்கு, இப்பொடியை, தேன் அல்லது நீரில் குழைத்து முகத்தில் பயன்படுத்தினால், முகம் பொலிவு பெறுவதோடு, வெயிலினால் ஏற்படும் கருமையையும் அகற்றும். ஜாதிக்காய் பொடி யை, அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால், பொடுகு, வெள்ளை பூச்சுகள் குறையும்.
குழந்தைகளுக்கு, உணவில் கலந்து கொடுப்பதால், அஜீரண கோளாறுகள் நீங்கிவிடும். முதியோர்களின் மூட்டு வலி, தசை வலி போன்ற பிரச்னைகளை நீக்குவதற்கு, ஜாதிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். பலவீனமான பற்கள் மற்றும் கிருமிகளால் சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்னைகளை போக்கவும் ஜாதிக்காய் பயன்படுகிறது

கஸ்தூரி மஞ்சள்!



விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி. மார்க்கெட்டில் இருக்கும் பல்வேறு கிரீம்களும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்பட்டவைதான். வெறும் அழகு சாதனப் பொருளாக மட்டுமின்றி, அஜீரணத்துக்கு மருந்தாகவும் மஞ்சள் பயன்படுகிறது.


கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும்.
50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணம் ஆக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும்.
கஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி தீரும்.
பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும்.
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.
மிளகு, கடுக்காய் தோல், வேம்பு விதை, கஸ்தூரி மஞ்சள் கலந்து செய்யப்படும், ‘பஞ்சகற்பம்’ என்ற குளியல் பொடியை வாங்கிப் பயன்படுத்தலாம். சரும பிரச்னை ஏற்படாது.
கஸ்தூரி மஞ்சளுடன் பாசிப்பயறு, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, ரோஜா இதழ், செண்பகப்பூ, வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து, பொடி செய்து, தினமும் தேய்த்துக் குளித்துவந்தால், தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும். தோல் மென்மை ஆகும். முகப்பருக்கள், வியர்வைக் கட்டிகள் மறையும்.
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

ஞாயிறு, 24 மே, 2015

மல்லிகைப்பூ


மல்லிகைப்பூ வாசத்தில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. அதனால்தான் இதை மன்மதமலர் என்று அழைக்கின்றனர். மல்லிகைப்பூவில் மனதை மயக்கும் வாசனை மட்டுமல்ல, மனிதர்களின் நோயை போக்கும் மருந்தும் உள்ளது. ஓட்டலில் தொடர்ந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு, வயிற்றில் பூச்சி உண்டாகும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலிந்து, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் தென்படும். இந்த அறிகுறிகள் தெரிந்தால், நான்கு மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்த வேண்டும்.
இவ்வாறு அருந்தினால், வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழுக்கள் அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்ல, அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தினால், உடல் நலத்துக்கு நல்லது. அதே போல், மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி, அவை காகிதம் போல உலர்ந்த பின், அவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடித்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். வேறு சிகிச்சை தேவை இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை மென்று விழுங்கினால், உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அவ்வப்போது ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கும், மல்லிகைப்பூ சிறந்த நிவாரணியாகும். சிலருக்கு மல்லிகை வாசனை, தலை
வலியை ஏற்படுத்தும். ஆனால், தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உண்டு என்பது பலருக்கு தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை, கையில் வைத்து கசக்கி அதனை நெற்றியில் தேய்த்து விட்டால், தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப்பூவில் இருந்து தயாரிக்கப்படும், வாசனை திரவியங்களை உலகளவில் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாசனைக்கு அடிமையானவர்கள், வேறு சென்ட்டை பயன்படுத்துவதில்லை. மல்லிகைப் பூவில் இருந்து, ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடிக்கொண்டால் போதும். மன அழுத்தமும், உடல் சூடும் காணாமல் போய்விடும்.
மல்லிகைப்பூவின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள், அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாக இப்பூவை பயன்படுத்தி வந்துள்ளனர். உடலில் அடிபட்டு வீக்கம் அல்லது சுளுக்கு பிடிப்பு ஏற்பட்டால் மல்லிகைப் பூவை வைத்து கட்டுப்போட்டால் வீக்கமும் வலியும் நீங்கி விடும். உடல் வலி உள்ளவர்கள், படுக்கையில் மல்லிகைப்பூவை தூவி, படுத்து உறங்கினால் வலி நீங்கும்.

ஆண்களே! நீங்க ‘அப்பா’வாக‌ வேண்டுமா?



திருமணம் ஆன ஆண்கள், கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந் தால், அவர்களது
விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் வீரியமும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் முழு தாதுபலம் பெற்று மனைவியுடன் இணையலாம். அப்ப‍டி இணையும்போது அவர்களின் மனைவி கருத்த‍ரிப் ப‍து நிச்ச‍யம் ஆகவே தான் அப்பா ஆக துடிக்கும் ஆண்கள் தினமும் கேரட்டை உணவில் தவறாமல் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.