வெள்ளி, 26 செப்டம்பர், 2014

நோய் அண்டாமல் இருக்க கைகொடுக்கும் காய்கறிகள்

 

காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். காய்கறிகளை எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை கூடாது; காரணம், அவற்றில் கலோரி அளவு ரொம்ப கம்மி. பச்சை மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகளை உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை தள்ளிப் போடலாம். இந்த வகை காய்கறிகளில், பீட்டா கரோடின், வைட்டமின் – ஏ சத்துக்கள் நிறைந்திருப்பதே காரணம்.
பீட்டா கரோடின், புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக் கிழங்கு, காலி பிளவர், நுால்கோல் போன்றவை, இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.
* நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில், அதிக அளவு வைட்டமின் – சி இருப்பதால், இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.
* இதுதவிர, மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிற காய்கறிகளிலும் அனைத்திலுமே வைட்டமின் – சி
உள்ளது. உணவில் இவற்றை சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
* சில காய்கறிகளில் இரும்புச் சத்துக்கள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து காரணமாக, ‘அனீமியா’ எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
* முட்டைகோஸ் போன்ற கரும்பச்சை நிற காய்கறிகளில் கால்சியம் அதிகம். எலும்பு மற்றும் பற்களுக்கு இவை ரொம்ப அவசியம்.
* உடலின் சக்திக்கு பொட்டாசியம் அவசியம். பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. பழங்கள், காய்கறிகளில் ‘அமினோ’ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க உதவுகிறது.

சில கீரை வகைகளும் அதிலுள்ள சத்துக்களும்!


ஆரோக்கிய உணவில் முதலிடம் வகிப்பது கீரைதான். இதை உண வில் தினமும் சேர்த்து வந்தால் நோய் நொடி அண்டாது. ஒவ்வொரு
கீரைக்கும் உள்ள சத்துக்களை காண்போம்.
முருங்கைக் கீரை –
விட்டமின் ஏ,பி,சி, கணிசமான அளவு இரும்புச் சத்துள்ளது. செரிமானம் குறைந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இரவில் சாப்பிடக் கூடாது. கண் பார்வையைத் தெளிவாக்கும் குணம் கொண்டது. தாது பலம் பெருகும்.
வெந்தயக் கீரை-
இரும்புச் சத்து, விட்டமின் ஏ,சுண்ணாம்பு சத்து கொண்டது. வளரும் குழந்தை களுக்கும் மூல வியாதிக் காரர்களுக்கும் நீரிழிவு நோயாளிக்கும் ஏற்றது. சூட்டைத் தணித்து உடலு க்கு வலுவூட்டும்.
அகத்திக் கீரை-
விட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்து கொண்டது. வாய் மற்றும் வயிற்றில் புண் உள்ளர்வர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும். மற்ற மருந்துகள் சாப்பிடும் போது இதைச் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் சூப் பதத்தில் மட்டுமே சாப்பிட வேண் டும்.
பசலைக் கீரை 
வைட்டமின் ஏ 5580 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் , இரும்பு 1.14 மி.கி., பொட்டா ஷியம் 306 மி.கி ஆகியவை உள்ளன. பார்வைக் கோளா றைக்தடுக்க உதவும் வைட்டமின் ஏ உடல் சோர்வைத்தடுக்க உதவும் பொட்டாஷியச்சத்து ஆகியவை பசலைக்கீரையில் உள்ள ன.
மணத்தக்காளி-
விட்டமின் பி12, மற்றும் ஏரி போப்வி ன் கொண்டது. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு நல்லது, உடல் சூட்டைக் குறைக்கும். காயத்தை ஆற்றும். வயிற்றில் பூச்சி கள் உருவாகாமல் தடுக்கும்.
வல்லாரை-
செரடோனியம் கொண்டது. பள்ளிக் குழந்தைக ளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்ற லைப் பெருக்கும் தன்மை கொண்டது.
புதினா-
இரும்பு, சுண்ணாம்பு சத்து, விட்டமின்சி, விட்டமின் டி கொண்டது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. மூல நோய், தொண்டையில் ரணம். குடல் புண் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. பசியையும் நாக்கின் ருசியையும் தூண்டக் கூடியது. செரிமானத்துக்கு உதவும்.
கொத்துமல்லி-
விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் சி கொண்டது. எல்லோருக்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை க் கொடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். நாவின் ருசியைத் தூண்டும்.
*
முளைக்கீரை-
undefinedதாது உப்புகள் மற்றும் விட்டமின் ஏ கொ ண்டது. உடல் தளர்ச்சியைப் போக்கும். சதை ப்பிடிப்பு இல்லாதவர்கள் அடிக்கடி சாப்பிட லாம். ஆஸ்துமா நோயாளிகள். தலையில் நீர் கோத்து இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

எல்லாத்துக்கும் வைத்தியம்


எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:
* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
* உலர் திராட்சைப் பழத்தை, வெது வெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, காலையில் அருந்தினால், மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும்.
* வல்லாரைக் கீரையை நிழலில் காய வைத்து, பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால், நினைவாற்றல் பெருகும்.
* வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து, நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி, நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால், முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
* வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடியுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
* புதினா விதையை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால், பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
* எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால், உஷ்ணம் குறையும்.
* நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக, வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து, குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* பூச்சி கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால், வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விஷம் பரவாது. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
* தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்; தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்க சுவையாக இருக்கும்.
* கொப்பரைத் தேங்காயை கசகசா வுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
* பச்சை கொத்தமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
* தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
* வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் பூசணிக்காய் கட்டுப்படுத்தும்.
* ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால், இடுப்பு வலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து, கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

வெந்நீர் குடித்து நிவாரணம் பெறுங்கள்!


வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை.
அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அப்படியென்ன பலன்களை வெந்நீர் தந்து விடப் போகிறது என, சிந்திப்போருக்காக, சில விஷயங்கள் இதோ:

வடை, பக்கோடா, பூரி என, எண்ணெயில் பொரித்த அயிட்டங்களையோ அல்லது இனிப்புகளையோ சாப்பிட்ட பின் நெஞ்சுக்குள் சிலருக்கு எரிச்சல் தோன்றும். உடனே நாம் எடுப்பது, ‘ஜெலுசில் அல்லது டைஜின்’ மாத்திரைகளை தான். ஆனால், அதெல்லாம் தேவையில்லை. ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து, மெதுவாக பருகுங்கள் போதும். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போன இடம் தெரியாது.
* உண்ட பின், சுடச்சுட வெந்நீர் குடித்தால், உடலில் அதிகப்படி சதை போடுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வெந்நீர் கைகண்ட மருந்து. உடனடி நிவாரணம் நிச்சயம்.
* உடம்பு வலியா? வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடித்தால் போதும். பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு நீங்கி விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்து, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்து விடும்.
* கால் கடுக்க நின்றாலோ, அலைந்து திரிந்தாலோ, கால் பாதங்கள் வலி எடுக்கும். அதற்கும் வெந்நீர் தான் உடனடி மருத்துவம். பெரிய வாளியில், சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி, அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். காலில் அழுக்கு இருக்குமானால், வெந்நீரில் கொஞ்சம், ‘டெட்டால்’ ஊற்றுங்கள்; காலில் இருந்த வலியும் போகும்; அழுக்கும் நீங்கும்.
* வெந்நீரில், ‘விக்ஸ்’ அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு, அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை பெறலாம். திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாதீர்கள். ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி ஏற்படலாம்.
* கிராமங்களில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பர். உணவு கட்டுப்பாடு இல்லாமல், அஜீரணக் கோளாறுக்கு ஆளாவோர், சுக்கு வெந்நீரை வாரந்தோறும் அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
* வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
* வெயிலில் திரிந்து விட்டு, வீடு திரும்பியதும் தாகத்தை போக்க, ஐஸ் வாட்டர் குடிக்காதீர்கள். சற்று வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்க நல்ல வழி. ஈஸ்னோபோலியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்போர், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக, வெந்நீர் தான் அருந்த வேண்டும். விருந்துகளில், செமையாக கட்டி முடித்ததும், கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம்ஸ் பக்கம் போகாமல், ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள்; உடம்புக்கு நல்லது.
* ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; வீட்டு உபயோகத்திற்கும் வெந்நீரின் உதவி பெரிது. நெய், எண்ணெய் இருந்த பாத்திரங்களை கழுவும்போது, வெந்நீரில் ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இருக்காது என்பது, பெண்மணிகளுக்கு தெரியாத விஷயமல்ல.
அதுபோலவே தரையை துடைக்கும்போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருந்தால், வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடைத்தால் கிருமிகள் மடியும்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

கை, கால் பராமரிப்பு



தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சை ச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த் து இதில் நம் கால்களை ஊற வைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடை யில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்க ளில் தேய்த்த பின், குளிர்ந்த நீரில் கால்களை
மூன்று நிமிடம் வைத்து பின்னர் மிருதுவான பருத்தித் துணியால்துடைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது மா ஸ்சரைசர் – ஐ கால்களில் தேய்த்து விடவும். இதே மு றையைக் கைகளுக்கும் செய்துவந்தால் கைகளும் , கால்களும் நன்கு பளபள க்கும்.
இம்முறை உங்களால் தி னமும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது இவ்வாறு செய்துவர வேண்டும். தினமும் தூங்கப்போகும்முன் கால்களை வெந்நீரி ல் ஊறவைத்து புதிதாக வாங்கிய பல் துலக்கும் பிரஸ்சால் கால்களைத் தேய்த் து நன்கு தூய்மை செய்யலாம்.
கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், கால்கள் மிருதுவாக இருக்கும்.