ஞாயிறு, 25 டிசம்பர், 2011

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?


நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதி யாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தா லும், கர்ப்ப காலங்களில் அதிகமா ன ரத்தப் போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்க ளாலும் குறைமாதக் குழந்தைகள் பிறக்கின் றன.
ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட் ட குழந்தைகள் பிறக்கும் போதும் இது போன்ற குழந்தைகள் பிறக்க  வாய்ப்பு ள்ளது. ஆயிரம் கிராமிற்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளை ப் பாதுகாக்க இங்குபேட்டர், 
வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளைப் பயன்படுத்தி உயிர்  பிழைக்க வைக்க முடியும்.இந்தக் கரு விகள் வெளிநாட்டிலிருந்து இறக்கும தி செய்யப்படுபவை.குழந்தை பிறந்த வுடனேயே தாய்ப்பால் அருந்த முழுத் தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு,  தாய் ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எவ் வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
Baby Birth
நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து முறை தாய்ப்பாலை கொடுப் பதால்  மார்பகப் புற்று நோய் வரு வதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட் டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்துக் குடிப்பதால் வாந்தி ஏற்படுகிறது. அதிக  பாலை அருந்துவதாலு ம், அருந்திய பால் உணவுப் பாதையில் இரு ந்து மீண்டும் வாய்வழியே திரும்புவ தாலும் வாந்தி  ஏற்படுகிறது. இதனால் பயப்படத் தேவையில்லை, குழந் தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி  எடுத்தால் மரு த்துவரை அணுகி உணவுப் பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மேற் கொள்ள வே ண்டும்.
பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக் கும். சில குழந்தைகள் பால் குடித்தவுடன் மலம்  கழிக்கும். ஒரு சில குழந்தைகள் இரண் டு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும். இவை அனைத்தும்  இயற்கையான செயலே. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 72 மணி நேர ம் மலம் கழிக்கவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிர ச்னைகள் உள்ளதா என்பதை  அறி ந்து சிகிச்சை தர வேண்டும். பன் றிக் காய்ச்சலைத் தடுக்கும் பசு சீம்பால்..
பசுவின் சீம்பாலைக் கொண்டு பன்றிக் காய்ச் சலை குணப்படுத்த முடியும் என்பது ஆராய் ச்சி மூலம் தெரியவந்துள் ளது. மெக்ஸி கோவில் தோன்றிய பன்றிக் காய்ச்சல் நோய் இன்று உலகம் முழு வதும் பரவி மக்களை பீதியில்  உறைய வைத்துள்ளது. இந்தியா வில் மட்டும் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள் ளனர். உலகம் முழுவதும் 2000-க்கும் அதிகமானோர் பலியாகியு ள்ளனர்.
குஜராத்தில் 50 வருடகாலமாக பால் உற்பத்தியில் சிறந்து விளங் கும் ஆனந்த் நகரில் நடந்த ஆய்வில் பசுவின்  சீம்பால் மூலம் பன்றிக் காய்ச்சலைக் குணப் படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. ஆனந்த் நகர் அமுல்  நிறுவனமும், மும்பை யைச் சேர்ந்த பையோமிக்ஸ் நெட்ஒர்க் நிறு வனமும் சீம்பாலை வைத்து ஆய்வு மேற்கொ ண்டது. சீம்பாலில் உள்ள கொழுப்புச் சத்தை நீக்கிவிட்டு நோய் பாதித்த நபருக்கு அளிப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சல்  குணமா கிறது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து பையோமிக்ஸ் நிறுவனத் தலைவர் பவன் சர்மா கூறுகையில் ‘‘கொலஸ்ட்ரம் எனப்படும்  சீம்பாலில் இருந்து, நானோ முறைப்படி கொ ழுப்பை ஃபில்டர் செய்து எடுத்து விடுகிறோம். நானோ பெப்டைடு என்ற இந்தக் கலவைக்கு ‘ராதா – 108’ என பெயரிட்டு இருக்கி றோம். இந் த திரவத்தை நோய் பாதித்த வரின் வாயில்  ஊற்றும்போது அது இதயத்திற்குச் சென்று உடலில் மற்ற பாகங்களுக்கும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு  பண்ணுகிறது’’ என்கிறார்.
கர்ப்பிணிகளே! மீன் சாப்பிடுங்கள்!கர்ப்பிணிப் பெண்கள் மீன் வ கை உணவுகளைச் சாப்பிட்டால், பிற க்கும் குழந்தைகளின் மூளை வளர் ச்சி நன்றாக  இருக்கும் என மருத்துவ ஆய்வில் தெரிய வந் துள்ளது!
இங்கிலாந்து நாட்டின் மெட்ரோபாலி ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நல வாழ்வு மையமும்  இணைந்து, கர்ப்பிணிப் பெண்கள் குறித்த ஆய்வை மேற் கொண்டன. இதற்காக 11 ஆயிரத்து 875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் கர் ப்ப காலத்தில் மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால்,  பிற க்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச் சியுடனும், மூளை சம்பந் தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இந்த ஆய்வானது கர்ப்பிணிகளி டமும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப் பட்டது.
அதில், கர்ப காலத்தின்போது அதிக மீன் உண வுகளைச் சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தை கள் அதிக புத்திக்கூர்மையுடனும் அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுத்தும் தகவல் தொடர்பும் மிகச்சிறப்பாக  இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குக் காரணமான ‘ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்’ மீன்களில்  அதிகமாக இருப் பதுதான். கர்ப்பிணிப் பெண்களி ன் 32 வார கர்ப்பகாலத்தில் 340 கிராமிற்கு குறைவாக மீன் உட் கொண்ட கர்ப்பிணிக் குழந்தைக ளின் புத்திக்கூர்மை சற்று குறை வாகவே இருந்தது. அதே நேரம் குழந்தைகளின்  உடம்பில் ‘ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்’ அள வுக்கு அதிகமாக இருந்தால் குழ ந்தைகளின் புத்திக் கூர்மை மழு ங்கவும்  வாய்ப்புள்ளது! ஹீரோ டெர்மா பிக்மென்டோஸம் & புற ஊதாக் கதிர் களால் வரும் தோல் நோய்
காலையில் வெளிப்படும் சூரிய வெளிச்சத்தினால் நமக்கு கால் சியம், ‘வைட்டமின்-டி’ போன்ற சத்துக்கள் கிடைக்கின் றன. அதே சமயம், சூரிய ஒளியின் மிகையான வெப்பத்தால், பல்வேறு நோய்க ளும் தோன்றுகின்றன. அப்படி  ஏற்படும் நோய் களில் ஒன்றுதான் ‘ஹீரோடெர்மா பிக்மென் டோஸம்’.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் அமைப்பு சாதா ரண மனிதர்களின் உடல் அமைப்பு போல் அல்லாமல் வேறுபட்டு இருக்கும். இது ஒரு அபூர்வ நோய். உடைகளால் மூடப்படாத இட ங்களில்தான் இதன் பாதிப்பு  அதிகமாக இரு க்கும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு முதலில் படிப்படியாக தோலின் நிறம் மாறும். பின்னர் முகம் மற்றும் தோலின் கை கால்களில் அருவரு க்கத் தக்க வகையில், திட்டு த் திட்டாக கரும்புள்ளிகள்  தோன்றும். அதைத் தொடர்ந்து கொப்புளங்கள் ஏற்படும். இவை கடுமையான வலியை ஏற்படுத்தும். சில நாட்களில்  அவை மறைந்து, தோல் நலிவடைந்து விடும். அப் போது, அந்தப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும்.  இந்த நிலையில் சூரிய ஒளி பட நேர்ந்தால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் வெளிச்சத் தைப் பார்க்க முடியாமல் கண்களில் கூச்சம் எடுக்கும். இவர்களு க்கு சூரிய ஒளி தாக்கத்தினால் கருவிழிப் படல த்தில் அழற்சியும் ஏற்படலாம். இந்த ஹீரோ டெர்மா  பிக்மென்டோஸம்’ நோயினால் பாதி க்கப்பட்டவர்கள் தங்களது தோலை சூரிய ஒளி படாத வகையில் பாதுகாத்துக்  கொள்ள வே ண்டும். மேலும், இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரவேண்டும். தோலில் புடைப்பு மற்றும்  பாதிப்பு உள்ள வர்களுக்கு சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் புற ஊதாக் கதிர் களால் தோல் புற்றுநோய்கூட  ஏற்படலாம்.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

நாம் நகை அணிவது ஏன்? எதற்கு?



அரைநாண் கொடி அணிவது ஏன்?
உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது.
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரி யோதனன் போருக்கு போகுமுன் தலையிரு ந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது
மெட்டி அணிவது ஏன்?
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ் சி அணிவதால் கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில் லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வே ண்டும். ஏனெனில் வெள்ளியில் இரு க்கக்கூடிய ஒருவித காந்த சக்தி கா லில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்க ளை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்பம் அடை யும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியி ன்மை ஏற் படும்.
கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பி னை அழுத்தி தேய்த்தால் மேற் கண் ட நோவுகள் குறையும். இதனை எப் போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியி லான மெட்டி அணிவித்தார்கள். கா ரணம், நடக்கும்போது இயற்கையா கவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப் புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உரு வாக் கியிருக்கின்றார்கள்.
கொலுசு அணிவது ஏன்?
கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷய ம். பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக் கூடாது என்பதற்குதான் இந்த கொ லுசு.
உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலை க்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறை ந்து கட்டுப்படுகிறது. சில விவாக ரமான விஷயங்கள் “இலை மறை கனியாக” இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன் னோர்கள்.
மூக்குத்தி அணிவது ஏன்?
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவ தற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர் கள் ஆண்களுக்கு வலது கையும் பெண் களுக்கு இடது கையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய் துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியா னம் செய்வார்கள். இதற்கு கார ணம் இடது காலை மடக்கி தியா னம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வல து என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியா னம், பிராத்தனை எல்லாம் க ண்டிப்பாக பலன் தரும். அதனா ல் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத் திற்கு மாற்ற வே ண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக் குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக் கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப் படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர் ச்சி பிரவா கங்கள் உள்ளன. இதனைச் செயல் படுத்துவதற்கு அந்தப் பகுதி துணை யாக இருக்கிறது. இப்படி இந்தப் பகு தியை அதிகமாக செயல் படுத்து வதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்க த்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வல து பக்கமாக வேலை செய்ய வைக்கி றோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பல மாக உள்ளது. பெண்கள் முக்கு த்தி அணியும்போது, முன் நெ ற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன் னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறு ம். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண் டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண் களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டு கிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண் ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்து வதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்ப ந்தமான தொந்தர வுகள், பார்வைக் கோ ளாறு சரி செய் யப்படுகின்றன்.
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்ட தால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக் குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப் பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்க ம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்ப டும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப் படு த்துகிறது. மனதை அமைதிப்படுத்துகி றது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத் தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற் படாமல் இருக்க முக் குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக் கின்றனர்.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண் ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகை களைப் பெண்கள் அணிவதன் மூ லம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப் பட்டு போகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர் களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவா கம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகி றது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.
மோதிரம் அணிவது ஏன்?
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இரு தய நோய், வயிற்றுக் கோ ளாறுகள் போன்ற வியாதிக ளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விர லில் மோதிரம் அணியக் கூ டாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.


செவ்வாய், 4 அக்டோபர், 2011

மார்பகங்கள்: (BREASTS)


மார்பகங்கள் என்றால் என்ன? இவை எதனால் ஆனவை?

மார்பகங்களின் பால்சுரப்பிகள் கொழுப்பால் சூழப்பட்டவை. மரவேர்களைப்
போல முலைக் காம்பின் பின்புறம் பால்ச்சுரப்பிகள் உள்ளன. சிறியவை சிறியவைகளாக அமைந்துள்ளன. உண்மையில் மார்பகங்களை சூழ்ந்துள்ள கொழுப்பே அவற்றின் அமைப்பை நிர்ணயிக்கின்றது. பெரியதோ சிறியதோ என்று தீர்மானிக்கப்படுகிறது. பாலைக் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரியதோ சிறியதோ எல்லாமே சிறந்தவைதாம்.

ஒரு மார்பகம் மற்றையதைக் காட்டிலும் பெரிதாய் இருப்பது சாதாரணமானதுதானா?

ஆம். கைகளோ அல்லது கால்களோ அல்லது புருவங்களோ ஒரே மாதிரி இருப்பதில்லையே. பருவம் அடையும் போது மார்பகங்களின் அளவில் பெரிய வித்தியாசம் காணப்படும். இரண்டுமே வளர்கின்ற போதிலும் ஒரே அளவில் வளர்ச்சியுறுவதில்லை. சில வேளைகளில் ஒன்று முற்றாக வளர்ந்தபிறகே மற்றது வளரத் தொடங்குகிறது. பெரிதானது பெரிதாகவே இருக்க மற்றது அதனை நெருக்கிக் கொண்டபடி இருக்கும். இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.

மார்பகங்கள் உருக்குலைந்து காணப்பட்டால் என்ன?

வளர்ந்து வரும் போது மார்பகங்கள் உருக்குலைந்து தான் காண்ப்படும். அதனால் மார்புப் புற்றுநோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தேவையில்லை. மார்புப் புற்றுநோய் பருவம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகே வருகிறது.

இரு மார்பகங்களும் பாரதூரமாக வித்தியாசப்பட்டுக் காணப்பட்டால் ஒரு குழந்தை வைத்தியரையோ பிள்ளைப்பேற்று நிபுணரையோ அணுக வேண்டும்.

மார்பகங்கள் வந்தவுடன் மார்புக்கச்சை தேவை தானா?

எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் தேவையில்லை. மிகவும் சிறியவையாக இருக்கும்போது தொங்கிப் போய்விடுமோ என்ற பயத்திற்கே இடமில்லை.

மார்பகங்கள் மிகவும் பெரியவையாக உள்ளபோது மட்டுமே தொங்கிவிடுமாதலால் மார்புக் கச்சு தேவை. வேகமாக நடக்கும் போதும் ஓடும் போதும் மார்புக் கச்சை அணிந்திருப்பது வசதியாய் இருக்கும்.

முலைக்காம்புகள் கவிழ்ந்து இருப்பதனாலென்ன?

கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளுக்குக் காரணம் முலைக்காம்புகளை உள்ளுக்குள் இழுத்து வைக்கும் திசுக்களே ஆகும். கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளால் உள்ள பிரச்சினை குழந்தைக்குப் பால் ஊட்டும் போது சிரமம் தரும். கர்ப்பம் தரிக்கும் போதும் முலைக்காம்புகள் தாமாகவே திரும்பிவிடும். சிலவேளைகளில் முலைக்காம்புகளை நடுப்புறம் நோக்கி விரல்களால் இழுத்துவிட உதவும். இது இறுக்கமான திசுவை இளக்கி முலைக்காம்புகளை திருப்பி விடுகிறது.

கட்டாயகமாக பால் ஊட்ட தேவைப்படாவிட்டால் கவிழ்ந்துள்ள முலைக்காம்புகள் சாதாரணமானவையே. ஒருவித பிரச்சினையும் இல்லை.

பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் எப்படி மார்பகங்களைப் பெரியனவாகச் செய்கின்றனர்?

இந்தச் சத்திர சிகிச்சையானது பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஆகும்.

முதலில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மார்பகத்தின் கீழ்ப்பகுதியை வெட்டுகின்றனர். (வெட்டிய அடையாளம் தெரியாமலிருக்க) அதன் பின் ஒவ்வொரு மார்பகத்திலும் பைநிறைய சிலிகோனை நிரப்பி இந்தப் பைகள் விலாவுடன் தைக்கப்படுகின்றன. இதனால் பால் சுரப்பிகளின் கொள்கலன்கள் வெட்டப்படுகின்றன. எனவே குழந்தைக்குப் பால் ஊட்ட இயலாமல் போய்விடும். இந்தச் சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட பெண்கள் பல மாதங்களுக்குப் பிறகும் உறுத்துவதாகவும் முலைக்காம்புகள் இன்பம் ஊட்டும் தன்மையை மீண்டும் பெறுவதில்லை என்றும் குறைப்படுகின்றனர். இந்த சத்திர சிகிச்சை செய்து கொள்வது பாலியல் hPதியில் கூடிய கவர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே. ஆதலால் இது பெரிதும் வெட்கப்படக் கூடியதாகவுள்ளது.

மற்றொரு பிரச்சினை யாதெனில் பெருப்பிக்கப்பட்ட மார்பகம் என மற்றையோரால் கண்டு அறியக் கூடியதாகவுள்ளது. மார்பகக் கவர்ச்சியாகக் கொள்ளும் துள்ளும் தன்மையை அவை இழந்து விடுகின்றன. நீங்கள் முதுகுபடப் படுத்திருக்கும் போது சற்று ஒரு புறமாகச் சரிவதில்லை. பீரங்கிகளைப் போல குத்தென நிற்கும். சிலவருஷங்களுக்குப் பிறகு மார்பகங்கள் உருக்குலைந்து கோலம் கெட்டுவிடும். திசுக்களில் வடுக்கள் தோன்றுவதால் இது ஏற்படுகிறது. அநேக பெண்கள் தமது சிலின்கோ பைகளை அகற்றுகின்றனர். அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள் பெரும் தொகையான பணத்தை நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டியுள்ளன.

சிலிக்கோன்பைகளை உள்ளே வைத்துக்கொண்டவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வர ஏதுவாகும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மார்பகங்களை பெரிதாக்க ஏதாவது எளிய முறை உண்டா?

இதற்கான உடற்பயிற்சி ஒன்றும் இல்லை. ஏனெனில் மார்பகத்தில் தசையொன்றுமில்லை. விலாவின் பின் புறத்தில்தான் தசை உள்ளது.

மார்பகங்கள் கொழுப்பாலானவையாதலால் உடல் கொழுத்து நிறைகூடினால் மார்பகங்கள் பெருக்க இடமுண்டு.

மார்பகங்களை ஊதவைக்கும் ஒரே மருந்து எஸ்ரேஜன் என்கின்ற பெண்ணுக்குரிய ஓமோன் ஆகும். இது கருத்தடை மாத்திரையிலுள்ளது. உங்களுடைய புதிய மார்பகங்கள் சிறிது நோவுடையதாயிருக்கும். (வீங்கியும் மிருதுவாகவும் இருப்பதனால்) முழுமையான நிறை 5 கிலோகிராமுக்குக் கூடுதலாக இருக்கும். உங்களுக்கு ஏன் பெரிய மார்பகங்கள் வேண்டும். பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் மெலிந்த சிறிய மார்பகங்களை உடைய பெண்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது தெரியுமா? ஏனெனில் மெலிவானவர் நாகரிக உடையில் அழகாகத் தோற்றம் அளிக்கிறார்;. அதோடு மெலிந்து சிறிய மார்பகங்களை உடையவர்கள் மார்புக்கச்சை அணியாமல் உல்லாசமாகத் திரியலாம்.

முலைக்காம்புகள் பெரிதாகவிருந்தால் என்ன?

எத்தனையோ பெண்கள் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள் என்பதை அறிய ஆச்சரியப்படுவீர்கள். தமது முலைக்காம்புகள் மிகவும் பெரியவையாகவுள்ளன என்று ஏன் நினைக்கிறார்கள்? ஏனெனில் நிர்வாணப் பெண்களின் படங்களில் சிறிய நிமிர்ந்த முலைக்காம்புகள் உடையவர்களாகத் தோற்றுவர். எல்லோருக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளபோது அப்படித்தான் இருக்கும்.

முலைக்காம்புகளுக்கு கீழ் உள்ள பகுதி மட்டும் வளர்ச்சியுறுவதில்லை. முலைக் காம்புகளும் கூட முதலில் வளர்ச்சியுறுகின்றன. அவை பெருத்து கருமைநிறம் அடைகின்றன. அவை தீண்டப்படும் போது எழுச்சி பெறுகின்றன. சிறிய அளவினதாகி கூர்மையாகத் தோன்றும். இப்புகைப்படங்களில் மட்டுமே குத்தாகவுள்ளன. மற்றெல்லா நேரங்களிலும் அல்ல.

அநேக படப்பிடிப்பாளர்கள் கையில் பனிக்கட்டியை வைத்திருந்து முலைக்காம்புகளைச் சுருங்கச் செய்து நிமிர்ந்து இருக்க வைத்துப் படம் பிடிக்கின்றனர். பனிக்கட்டி இல்லாதபோது அவர்களும் மற்றவர்கள் போலவே தோற்றமளிப்பர்.

மார்பகங்கள் மிகப் பெரியதாக இருந்தால்...

பெரிய மார்பகங்களை உடைய சில பெண்கள் பிரகாசிப்பதற்கும் வேறுசிலர் அலங்கோலமாகவும் தோற்றமளிப்பதும் ஆச்சரியம் ஊட்டவில்லையா? இரண்டாம் வகைக்குக் காரணம் சோகமே.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டுவது சில மார்புக் கச்சைகளை வைத்து சாய்ந்துவிடாது பாருங்கள். புவி ஈர்ப்பு எமக்கு அறிவுறுத்துவது இதுதான். பாரமான மார்பகங்கள் மார்புக் கச்சை இல்லாவிட்டால் சாய்ந்து தொங்கும். சிறிய அளவினதே விரும்பப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யலாகாது. ஏனெனில் அது உருவத்தைச் சிதைத்து அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது .
சரியான அளவானதைப் பயன்படுத்தும் போது எவ்வளவு அழகாகத் தோற்றமளித்தீர்கள் என்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

பெரிய மார்பகங்களைச் சிறியவை ஆக்க சத்திரசிகிச்சை உண்டு. இது அநேக வடுக்களை ஏற்படுத்திவிடும். பாரம் அதிகமாகி முதுகுவலி ஏற்படுமாயின் இதனைச் செய்ய யோசிக்கலாம்.

சாய்ந்து தொங்கிப் போவதைப் பற்றிய பேச்சு

அநேகமாக எல்லா மார்பகங்களும் ஒரளவு சாய்ந்து தொங்கிப் போகும். நிமிர்ந்து மேல் நோக்கி உள்ளவை கூட ஆராய்ந்து பார்த்தால் கொழுப்பெல்லாம் கீழ்முகமாகவும் முலைக்காம்பு வளைவின் மேற்பகுதியில் இருப்பதையும் காணலாம்.

அநேக நிர்வாணப் புகைப்படங்களில் கைகளை மேலே உயர்த்தி தோள்களைப் பின்னுக்குத் தள்ளியும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படவில்லையா? ஏனெனில் இது மார்பகங்களை உயர்த்துகிறது. இதனால் தொங்குவது குறைவாகத் தென்படுகிறது. அதனால் நிர்வாணக் காட்சிப்பொருள்கள் கூட தங்கள் மார்பகங்களைப் பற்றி திருப்தியற்றுத் தென்படுகிறது. ஒருபோதும் தொங்காத மார்பகங்கள் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவையே. நாம் புகைப்படங்களில் காணும் அழகிகள் அனைவரும் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களே. அப்படிப்பட்ட பெண்களின் தோற்றங்கள் வெறும் போலித் தோற்றங்களே.

இது எல்லாம் சாதாரணமே. பறவைகள் கூட தமது கூட்டில் வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ண பிளாஸ்ரிக்குகளின் மீது தமது சொந்த முட்டைகளைக் காட்டிலும் கூடிய கவர்ச்சி கொள்ளுவதைக் காணலாம்.

திங்கள், 3 அக்டோபர், 2011

செக்ஸ் எக்சைஸஸ்


Post image for செக்ஸ் எக்சைஸஸ்
மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் சிக்கலானவை. உடலும் மனமும் இணைந்து செய்ய வேண்டிய செயல் ஆண் – பெண் உடலுறவு. உடலுறவு திருப்தியாக இருக்க எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, ஸ்பரிசம், வாசனை போன்ற பலவற்றின் சரியான செய்கைகளே பாலுணர்வை தூண்டி பாலியல் உறவுக்கு உதவுகின்றன.
ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின் போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான் பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பது தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பார்வை நரம்புகளும் பெரிய அளவில் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியவை பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான் எதிர் பாலினரைக் கண்டவுடன் பாலுணர்வு அதிகமாகின்றது. இரவு தூங்கும் பொழுதும் கனவில் பாலுறவு கொள்வது போல கனவு வருவதும் இந்த பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான்.
தொடு உணர்வு தான் ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது ஆணுறுப்பின் முன் புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது கீழ்க்கண்ட வகைகளாக ஏற்படுகிறது.
1. விருப்பமின்மை – பாலியல் உணர்வை தூண்டும் எல்லா செயல்களாலும் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க முடியாமல் போதல்.
2. செயல் திறன் குறைபாடு, இயலாமை, குறைந்த வீர்யம் – குறைவான வேகமும், செயல் திறனும் கொண்டவர்கள் நாளடைவில் உடலுறவைப் பற்றி சிந்திப்பதையே குறைத்துக் கொள்கின்றனர்.
3. விரைப்பின்மை – இது ஆணின் இனப்பெருக்க உறுப்பு பெண்ணுடன் உடலுறவு கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில்லாமல் இருப்பதையே குறிக்கும். விரைப்பு ஏற்பட கலவியின் போது ஆணுறுப்புக்கு அதிக ரத்தம் பாய வேண்டும்.
4. விந்து முந்துதல் – ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பினுள் நுழைந்த உடனேயே விந்து வெளியேறிவிடுவதாகும்.
5. விந்து வெளிப்படாமை – இந்த நிலையில் விந்து ஆணுறுப்பு வழியே வெளியேறாமல், பின்னோக்கி சிறுநீர்ப்பையில் விழுதல்
உடல் மற்றும் மனோரீதியான காரணங்கள்
1. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் குறைபாடு
2. இரத்த நாளங்கள், நரம்புகளின் குறைபாடுகுள், பாதிப்புகள்
3. சத்துணவு குறைபாடு
4. நீரிழிவு, நரம்பு மண்டல நோய்கள்
5. படபடப்பு, பேராவல், மனவிசாரம், துணைவியை திருப்திப்படுத்த முடியாதோ என்ற பயம், (கிஸீஜ்வீமீtஹ்), மனச்சோர்வு (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ).
6. அறியாமை, பாலியல் பற்றிய தவறான கருத்துகள்
7. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
8. பால்ய பருவத்தில் ஏற்படும் மனபாதிப்புகள்
9. பயம், தன்னம்பிக்கை இல்லாதது.
பெண்களின் குறைபாடுகள்
1. உடலுறவின் போது வலி (ஞிஹ்sஜீணீக்ஷீமீuஸீவீணீ)
2. பிறப்புறுப்பு தானாகவே சுருங்குவதால் உடலுறவு முடியாமல் போதல். அடிப்படை பயத்தால், பெண்ணின் பிறப்புறுப்பு “மூடியது” போல் சுருங்கி விடும்.
3. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்
4. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.
பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
2. பரபரப்பு, மனச்சோர்வு
3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
5. யௌவன பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள். உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது.
ஆயுர்வேத சிகிச்சை மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.
யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்
பலருக்கு யோகாவும் யோகாசனங்களும் ஆன்மீக தேவை உள்ள சந்நியாசிகள் போன்றவர்களுக்கே ஏற்றவை என்ற அபிப்பிராயம் உள்ளது. யோகா பாலயலங உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்கிறது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

ஆயுர்வேத மருந்துகள்


Post image for ஆயுர்வேத மருந்துகள்
Posted On Oct3,2011,By Muthukuamr

ஆயுர்வேதம் மிக பழமையானது. வேதங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு வரும் ஆயுர்வேதம், நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் நீண்ட கால வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை.
ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். அலோபதி முறையில் உள்ள மாத்திரைகள், கேப்ஸ§ல்கள், இன்ஜெக்ஷன், சிரப் போலவே ஆயுர்வேதத்திலும் பல வகைகளாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்
1. அர்க்கங்கள் – திரவப் பொருட்களுடன் மருந்து சரக்குகள் கொதிக்கும் போது எழும் நீராவி பல மருத்துவ குணங்கள் உடையது. மூலப்பொருட்களில் உள்ள சில குறைகள் (துர்வாசனை போன்ற) இந்த முறையில் நீக்கப்படுகிறது. நீராவியை குளிர வைத்து நீராக்குவதால் மருந்துகள் உட்கொள்வது சுலபமாகிறது. சாதாரணமாக கொதிக்க வைக்கும் போது நஷ்டமாகும் சில சத்துக்களை, அர்க்க முறையால் நஷ்டமாகாமல் தடுக்கலாம். தவிர பல மருந்து சரக்குகளை திரவ ரூபத்தில் வடித்து பல நாட்கள் சேமித்து வைக்கவும் இந்த முறை உதவுகிறது.
2. ஆஸவங்கள் – இந்த முறையில் சீதோஷ்ணத்தாலும், காலபோக்கினாலும் கெட்டு விடும் மருந்து சரக்குகளின் சக்தியை, எப்பொழுதும் கிடைக்குமாறு பாதுகாக்கப்படுகிறது. மருந்து சரக்குகளுடன் வெல்லம், சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருட்களையும் சேர்த்து, மண் பாண்டங்களில் வைத்து “சீல்” செய்யப்படுகின்றன. இந்த மண் பாண்டங்களை குறிப்பிட்ட காலம் வரை அப்படியே வைக்கப்படும். வெளிநாடுகளில் ‘ஒயின்’ (கீவீஸீமீ) தயாரிப்பது போல், இந்த மண்பாண்டங்களை சுரங்கங்களில், பூமியின் அடியிலோ வைக்கப்படும். இதனால் மருந்துப்பொருட்கள் புளித்து, நுரைத்து பொங்கும் காடியாகும். ஆங்கிலத்தில் ‘திமீக்ஷீனீமீஸீtணீtவீஷீஸீ’ என்று சொல்லப்படும் முறை தான் இது. முடிந்தவுடன் மண் கலங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் மேலே நிற்கும் திரவம் எடுக்கப்பட்டு வடிகட்டி வைக்கப்படும். அடியில் தேங்கிய வண்டல் தவிர்க்கப்படுகிறது. வடிகட்டி வைக்கப்பட்ட திரவம் தெளிந்தவுடன், அதை பாட்டில்களில் அடைத்து வைக்கப்படுகின்றன. பெரிய அளவில் தயாரிக்கும் போது பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேக்கு மர பீப்பாய்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
அரிஷ்டம் – அரிஷ்டங்கள் பெரும்பாலும் கஷாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மருந்து சரக்குகளை அப்படியே அல்லது ஒன்றிரண்டாக பொடித்து கஷாயமாக காய்ச்சி உபயோகிப்பது தான் இம் முறைக்கும் ஆஸ்வ முறைக்குமுள்ள வித்தியாசம். அரிஷ்டங்கள் தயாரிக்கு முன், அதற்கு தேவையான பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவைகள் தயாரிக்கப்படும் இடங்கள் பூச்சி, கொசு, ஈரம், குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
கஷாயச் சரக்குகளை, பொடித்து அவற்றை இரண்டு பங்கு, கொதிக்க வைத்த நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், கலவையை கசக்கி, வடிகட்டிய தண்ணீரை எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். வடிகட்டப்பட்ட மருந்து சரக்குகளுடன் மீண்டும் தண்ணீரை, இரண்டு பங்காக, சேர்த்து கொதிக்க வைத்து, ஒரு பங்காக வற்றியவுடன் வடிகட்டி, இந்த நீரை எடுத்து முன்பு சேகரித்த, பத்திரப்படுத்திய நீருடன் கலக்கவும். கஷாயத்தில் சேர்க்கப்படும் மருந்துப் பொருட்களின் தன்மைக்கேற்ப, தண்ணீரை குறைத்தோ அதிகரித்தோ, வேண்டிய அளவு வற்றச் செய்தும் தயாரிக்கலாம். தெளிந்த பின், மேல் நிற்கும் தெளிவை எடுத்து, சர்க்கரை முதலியவற்றை கலக்க வேண்டும். இவ்வாறு வண்டலை நீக்கி கஷாயத்தை சேகரித்து அதில் தேவையான அளவு சர்க்கரை அல்லது சுத்தீகரிக்கப்பட்ட வெல்லம் சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு, அதே மருந்தின் வண்டலை சேர்த்து கலங்களில் இட்டு துணியில் கட்டி வைக்கவும். அதே மருந்தின் வண்டல் கிடைக்காவிட்டால் திராக்ஷ£ரிஷ்டத்தில் அடி வண்டலை எல்லா மருந்துகளுக்கும் பயன்படுத்தலாம்.
3. சூரணங்கள் – மருந்து சரக்குகளை நன்றாக இடித்து, பொடியாக்கி, சலித்த நிலையில் தயார் செய்யும் மருந்து சூரணம் எனப்படுகிறது. சூரணங்கள் இரு வகைப்படும் – நன்றாக பொடித்து பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படும் சூரணம் முதல் வகை. இதை பொதுவாக சூரணம் என்றே குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது வகை சூரணம் “க்வாத சூரணம்” என்று அழைக்கப்படுகிறது.
சூரணங்கள் தயாரிப்பில் முதலில் தேவையான மருந்து சரக்குகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. நன்கு உலர்ந்ததும் இயந்திரங்கள் மூலம் பொடிக்கப்படுகின்றன. பழங்காலத்தில் உரல்களில் பொடி செய்யப்பட்டது. பிறகு சலிக்கப்படுகிறது. சில பொருட்களை தனியாக பொடித்துக் கொள்வது அவசியம். உதாரணமாக சர்க்கரை, கல்கண்டு, கற்பூரம், திராட்சை, பெருங்காயம், படிகாரம் போன்றவை தனியாக பொடிக்கப்பட்டு பிறகு சேர்க்கப்படுகின்றது. சிலவற்றை வறுத்து பொடிக்க வேண்டும்.
க்வாத சூரண வகையில் சில வற்றை கஷாயமாக செய்து உட்கொள்ள வேண்டியிருக்கும். வாய்கொப்பளித்தல், புண்களை கழுவுதல், குளித்தல் போன்ற வெளி உபயோகங்களுக்கு க்வாத சூரணம் பயன்படும். கஷாயமாக செய்யப்படும் போது, பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூரணத்திற்கு 16 பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி, எட்டில் ஒன்றாக குறுக்கி வடிகட்டி கஷாயம் தயாரிக்கப்படுகிறது. நீராவிக் கலங்களை உபயோகித்தும் கஷாயம் தயாரிக்கப்படுகிறது.
4. மாத்திரைகள் – மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக் கொள்வது சுலபமானது. இதற்கு மருந்துப் பொருட்களை ஒன்றிரண்டாக (ரவை போல்) உடைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் “நைசாக” பொடித்தால் மாத்திரைகள் சரியாக உருவாகாது. துகள்கள் ஒட்டிக் கொள்ள பெரும்பாலும் வேலம் பிசின் உபயோகிக்கப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
5. பானகம் – இது கலவையின் நீர்ப்பகுதியை குறுக்கி “பாகு” போல் தடிக்கச் செய்து தயாரிப்பது என்ற செய்முறை. லேஹியங்கள், வடகங்கள், இவற்றுக்கு பொதுவானது. கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், பனைவெல்லம் போன்றவற்றுடன் தண்ணீர் அல்லது கஷாயம் கலந்து, நன்கு கரைத்து, வடிகட்டி, கொதிக்க வைத்து, குறிப்பிட்ட அளவு கலவை கெட்டியானவுடன் அதில் நெய், பொடித்து சலித்த பொடிகளை சேர்த்து கலந்து, ஆறியவுடன் தேன் சேர்த்து லேஹியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
6. லேஹியங்கள் – ஆயுர்வேத மருந்துகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மருந்து “லேஹியம்”. லேஹியங்கள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி, நோயாளியின் உடல் தேறவும், பழைய பலத்தை அடையவும் உதவுகின்றன. லேஹிய தயாரிப்புக்கு ஆதாரமாக இருப்பது மேலே சொன்ன பானக பாகுபதமாகும். பாகுடன் நெய், பால், தேன், மருந்து சரக்குகள், இவற்றை சேர்த்து சேர்த்து பக்குவப்படுத்தி லேஹியமாக்குவார்கள். மருந்து, இதர பொருட்களை கலப்பதற்கு, பாகு சரியான பதத்தில் இருக்க வேண்டும். சரியான பக்குவ நிலைக்கு பாகு வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி நெய், மருந்து சூரணங்களை கலந்து, ஆற விட வேண்டும். ஆறிய பின் கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், தேன் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட லேஹியங்களை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
7. க்ருதம் (நெய்) மற்றும் தைலம் (எண்ணை) – நெய்யும் தைலமும் இதர மருந்துப் பொருட்களுடன் சேர்ந்து வியாதிகளை கண்டிக்க பக்குவப்டுத்தப்படுகின்றன. இந்த விதமாக இவற்றை பக்குவப்படுத்த கல்கம், திரவம், ஸ்நேஹம் என்ற மூன்றும் அத்தியாவசியமாகின்றன.
கல்கம் – தேவையான மருந்துகள் நன்கு விழுதாக அரைக்கப்பட்டு
எண்ணையுடன் கலக்கப்படுகின்றன. இந்த பசை போன்ற பொருளே, ‘கல்கம்’ எனப்படும்.
திரவம் – கல்கத்துடன் கஷாயம், சாறு, தண்ணீர், பால் தயிர், மாமிச ரஸம்,
முதலியன கலக்கப்படுகின்றன. இந்த கலவைக்கு திரவம் என்று பெயர்.
ஸ்நேஹம் – நெய், எண்ணை, கொழுப்பு, எலும்பில் உள்ள ஜவ்வு போன்ற
மஜ்ஜை ஆகியவை ஸ்நேஹம் என்று கூறப்படுகின்றன.
கல்கம், திரவம், ஸ்நேஹம் ஒன்று சேர்த்து காய்ச்சி, நீர்வற்றியவுடன்
இறக்கி, வடிகட்டி “க்ருதம்” “தைலம்” முதலியன தயாரிக்கப்படுகின்றன.
மேற்சொன்னவை தவிர இன்னும் பல முறைகளில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

சனி, 1 அக்டோபர், 2011

நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள்


பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயி ராக மாறியிரு க்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடை ந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன் றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடி கட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய் யா னது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இரு ந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலி கைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுரு வக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன் படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந் தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொ டுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொ டுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற் கும் நெய்யையே பயன்படுத்தி வந்து ள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழு ப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதி யை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட் கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோ கித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய் களை தடுக்கிறது.
நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பரும னாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள் ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக். 
நெய்யில் Saturated fat – 65%
Mono – unsaturated fat – 32%
Linoleic – unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்  வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி….
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடு வதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ண த்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண் ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறை த்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களு க்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிக மாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின் மையே…
வர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலு க்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசி யின்மையால் அவதியுறுவார்கள். சரி யான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலு ம், அதிக பட்டினியாகவும் இருப்பவர் களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள் ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போ தை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களு க்கும், மன அழுத்தம் கொண்டவர்க ளுக்கும் குடல் புண்ணாகிவிடும். இத னால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சா ப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவ ர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச் சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன் டும்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சித்த மருத்துவம்: மலரின் மகிமை

சித்த மருத்துவம்: மலரின் மகிமை: மலரின் மகிமை Posted On Sep 27,2011,By Muthukumar சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு, தற்செயலாக ஒரு மருத்துவ இதழ் மூல...

மலரின் மகிமை

மலரின் மகிமை

Posted On Sep 27,2011,By Muthukumar


சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு,
தற்செயலாக ஒரு மருத்துவ இதழ் மூலம் நிறைய மலர்களின் மகத்துவம் தெரிய வந்தது.

முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வு அதிகமாக்கும்.

செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூவினால் உண்டாகும் சுட்டையும் நீக்கும்.

இலுப்பைப்பூ:நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.புளியம்பூ : மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.

மாதுளம்பூ. அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.

வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம்,சுவையின்மை, மலப்புழுக்கள்,நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.

பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம்,நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம்பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ. சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும்.விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு,இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும் குருக்கத்திப்பு. கசப்பும்,இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால்,தலைநோய்,தாகம்,கப�
�்,புண், பித்தம்,பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.அழகுக்காவும், ஆராதனைக்காவும் மட்டுமே பூக்கள் என்று பலர் நினைக்கிறார்கள். பச்சிலைப் போல பூக்களும் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும் யுனானி வைத்தியதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

பொதுவாக நம் பெண்கள் கூந்தலில் நிறைய மலர்களை சூடிக்கொள்வதைக் காணலாம். இது பெண்களுக்கு அழகை தந்தாலும், அதிலும் ஒரு மகத்துவம் அடங்கியுள்ளது. இன்று விஞ்ஞானம் கண்டதை,அன்று மெய்யானம் நடைமுறைப்படுத்தியது.

இன்று பெண்கள் தலைக் குளித்தால் கூந்தலை மின்காந்த சுட்டிலில் உலர வைக்கிறார்கள். இந்த மின்காந்தம் கூந்தலை உதிரிவைப்பதுடன், மூளையையும் நாளடையில் பதிப்புர செய்கிறது.[மூளையின் அணுக்களை மெல்ல,மெல்லச் சாகடிக்கிறது]

மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது.அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது.

[இப்போது ஆறு அடி கூந்தல் மறைந்து, 6"[ஆறு அங்குலக் கூந்தலாகிவிட்டது. அதற்க்கேற்றாற் போல் 6" மலர் சரம் தொங்குவதைக் கண்டு மகிழதான் வேண்டும்] மணப்பெண்ணுக்கும், ஆடவரை மயக்க நினைக்க பெண்ணுக்கும் மல்லிகை ஒரு வரப்பிரசாதம். மல்லிகை மணம் பட்டாலே மன்மதனும் மயங்கி விடுவானே! நமது சமயத்தின் பண்பாட்டின்அன்றாட வாழ்க்கையில்,ஆடைஅணிகளில், வாழ்க்கைமுறைகளில் நாம் இயற்க்கையோடு இயந்துத்தான் வாழ்கிறோம்,

மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும்.அதிகப் பால்சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால்சுரப்பு குறையும். பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம்பூ: இதனை முகர வாந்தி நிற்கும்.உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும்.
ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்

சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும். காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும். செடியின் மலர் வகை.தும்பைப்பூ; தாகம்,கண் நோய்கள், ஜன்னி பாத சுரம் யாவும் தீரும்.

கருஞ்செம்பைப்பூ: கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும்.

செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம். உடலின்

உஷ்ணத்தைத் தக்கும். இதயத்தைபலப்படுத்தும். களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.

அலரிப்பூ: பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு
, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.

அகத்திப்பூ: எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும், சுண்ணாம்புச் சத்து அகத்திப்பூவில் அதிகம் இருக்கிறது.fணரண சக்திகும் மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.இம்மலரை தாரளமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

அல்லிப் பூ: நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.

இலுப்பைப் பூ: 'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்று சொல்லப்படுவது இனிப்புத் தன்மையாலேயே! இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.விரை வீக்கத்திற்கும் இந்த மலரை வதக்கி ஒத்திடம் கொடுக்கலாம்.

கண்டங்கத்திரிப் பூ: மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.

குங்குமப் பூ: பலவிதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப் பூ தன்னிகரற்று திகழ்கிறது.தலைவலி கண் நோய் காதுநோய் சுரம் ஆகிய நோய்களை இந்தப் பூ குணப்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம்.பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.குடல் புண்களுக்கு இது உதவும்.சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை.

சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.

சூரிய காந்திப் பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.

வெள்ளை தாமரைப் பூ. ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.

தாமரை பூ. இதயத்திற்க்கு பலமளிக்கும்.உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.

முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.

வாழைப் பூ. இதில் சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் பெண்களை வருத்தும் மாதவலி நீங்கும்.

வேப்பம் பூ. இது சிறந்த கிருமி நாசின் வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும்.
வயிறு சுத்தமாகவும்,

பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ கைக்கண்ட மருந்து.

வெங்காயப் பூ. இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொ ண்டால் ஆபத்துதான். தீ விபத் துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத் துகளில் இருந்து உங்கள் உட மை, உயிர், உறவினர்கள் யாவ ரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்….
* நீங்கள் அறிந்து எங்காவது தீப் பற்றிக்கொண்டால் உடனே தீய ணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியு ங்கள்.
* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முய ற்சி செய்யு ங்கள்.
* விபத்தின்போது தீப்பி டித்து எரியும் நபரின் அ ருகில் நீங்கள் இருந்தா ல் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர் வை, கோணி இதில் ஏ தாவது ஒன்றினால் அவ ரை இறுகச் சுற்றி னால் தீ பரவாமல் அணைந்து விடும்.
* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினா ல் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண் டும்.
* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொ திக்கும் சூடான எண்ணெ ய் தெறித்து விழுவதினா லோ, சூடான பொருள் உடலின் மீது விழுவத னாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்க ளை கையினால் தேய்ப் பதோ, நகத்தால் கிள்ளு வதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந் துகளை வைத்து லேசாக கட்டுப் போட வேண்டும்.
* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காய த்தின் மீது தடவலாம். முட் டையின் வெள்ளைக் கரு வை புண்ணின் மீது தடவி னால் எரிச்சல் குறையும்.
* கடுமையான தீக்காயங்க ளுக்கு அதன் மீது காற்றுப்ப டாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணி யை அகற்றக் கூடாது.
* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வை த்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூட லாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலா ம்.
* தீக்காயம் பட்டவருக்கு அடிக் கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற் றைக் கொடுக்கலாம்.
* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண் டும்.

குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை.

குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..

கருவில் வளரும் குழந்தை சீராக வளர தாயின் உணவு மு றை சீராக இருக்கவேண்டும். அது போல் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 
மேலும் குழந்தை பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை தா யின் உணவு முறையைப் பொறு த்தே குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும்.  ஆனால் குழந்தை வள ர்ந்து 3 வயது க்கு மேல் தான் உட ல் வளர்ச்சியும், மன வளர்ச்சி யும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.  எலும்புகள் வலுவடைய ஏற்ற தருணமு ம் இதுதான்.
மூன்று வயதுக்கு மேல் தான் குழந்தைகண்ணால் காண்பதை உட்கிரகித்துக் கொள்ளும்.  நன்றாகப் பேசும் பருவமும் இது தான்.
இந்த வளரும் வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் துறு துறுவென்று ஓடிக்கொ ண்டே இருக்கும்.   ஒரு இடத்தில் உட்கார வை த்து உணவு கொடுப்பது என்பது மிகவும் கடினமா னதாக இருக்கும்.  
இதனால் சில தாய்மா ர்கள் அந்த குழந்தையின் பின்னாடியே ஒடி வித விதமான விளையாட்டு காட்டி, வாயில் உணவு வைப்பது அந்த குழந்தைக்குத் தெரி யாமல் ஊட்டி விடு வார்கள்.    
இது தவறான செயலாகும்.  இப்படியே பழக்கப்படுத்தி விட் டால், நாட்கள் செல்லச் செல்ல ஊட்டிவிட்டால்தான் சாப்பிட முடியும் என்ற நிலை க்கு குழந்தை வந்துவி டும்.  எனவே, குழந் தையை அனைவரு டனும் அமர்ந்து சாப்பி டும் பழக்கத் தைக் கொண்டு வர வே ண்டும்.   தனக்கு பசித் தால் தானே வந் து அமர்ந்து உணவு கேட் கும் வகையில் குழந்தையை பழக் கப்படுத்த வேண்டும்.  
இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நிதானமான எல்லா  முழு வளர்ச்சியும் உண்டாகும்.  குழந்தை ஓடியாடி விளையாடுவ தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.   மேலும், இந்த நேர த்தில் குழந்தைகள் தனக்குப் பிடித்த உண வை தேர்ந்தெ டுத்து உண்ணுபவர்களாக இரு ப்பார்கள்.
அதற்காக ஒரே வித மான உணவுகளை தினமும் கொடுக்கக் கூடாது. அது உணவி ன்மீது குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கி விடும். விதவிதமான உணவுகள் குழந்தைகளுக்கு உண் ணும் விருப்பத்தை உண்டாக்கும்.  
எனவே,  இக்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவானது, அவர்க ளுக்கு பிடித்தமானதாக வும், வளர்ச்சிக்குத் தே வையான சத்துகளைக் கொடுக்கக் கூடியதாகவு ம், வயிறு நிறையும்படி யும் இருப்பது  அவசி யம். 
சத்தான உணவு என்ற வுடன் சிலர் வைட்டமின் மாத்திரை, டானிக் என பலவற்றை வாங்கிக் கொடுக்கிறார் கள்.  
இது முற்றிலும் தவறான நடவடிக்கை ஆகும்.  குழந்தை க்குத் தேவையான வைட்டமின், மினரல், தாதுப் பொருட்கள் அனைத்தும் உணவின் மூலம் கிடைத்தால் தா ன்  பக்க வி ளைவுகள் ஏதும் இல்லாத நீண்ட ஆரோக்கியம் கிடைக் கும்.
இயற்கையாகக் கிடைக் கும் கீரை, காய்கறிக ளில் இத்தகைய சத்துக் கள் நிறைந்துள்ளன. இவற்றை தவறாமல் குழந்தை களுக்கு உணவாகக் கொடு த்து வந்தால் அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி யின்படி, இந்த ஐந்து வயதில் சாப்பிடக் கூ டிய உணவுதான் ஐம்ப தில் ஆரோக்கியத்தை க் கொடுக்கும்.  இதில் குறைபாடு கண்டால் ஐம்பதில் ஆரோக்கிய த்திற்கு கேடு உண்டா கும் என அறியலாம்.  தினமும் மதிய உண வில் முருங்கைக் கீரை, ஆரைக்கீரை, தண்டுக்கீரை, கரிச லாங் கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, இவற்றில் ஏதா வது ஒன்றைக் கொடு க்க வேண்டும்.
சிறு குழந்தைகளுக்குமுளை கட் டிய பயறு வகைகளை அவி த்து க் கொடுப்பதுடன், உருளைக் கிழங் கையும் மசித்துக் கொடுப்பது நல் லது. அதுபோல் காய்கறி சூப் செய் து கொடுப்பது நல்லது.  
இந்த வயதில் சில குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் தேறாமல் நோஞ்சானாகக் காணப் படுவார்கள்.  இன்னும் சில குழந் கைள் சோர்வாகவும் புத்திக் கூர் மை இல்லா மலும் இருப்பார்கள்.
இவர்களுக்கு
ஆரைக்கீரை – 1 கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு
மணத்தக்காளிக்கீரை- 1 கைப்பிடி
 கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 2 பல்
மிளகு – 5
சின்ன வெங்காயம் – 3
சீரகம்- 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப்பாக்கி வாரம் இரு முறை கொடுத்து வந்தால் இளைத்த உடல் தேறுவதுடன், குழந்தைகள் வயிற்றுப் பூச்சி நீங்கும்.