வியாழன், 30 ஏப்ரல், 2015

மெலிந்த உடலை குண்டாக்க உதவும் அபூர்வமான அரியவகை மூலிகை!


தனிக்காட்டு ராஜாவாக காடுகளிலும், மலைசார்ந்த பகுதிகளிலும் தன்னிச்சையாக
வளரும் கருடன் கிழங்கு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. கொடி இனத்தை சேர்ந்த இந்த மூலிகைக்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என்ற வேறு பெயர்களும் உண்டு.
இம்மூலிகையை கயிற்றில் கட்டி தொங்க விட்டால், பார்ப்பதற்கு ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போல தோற்றம ளிப்பதால் இதற்கு கருடன் கிழங்கு என்று பெயர்.
மருத்துவ பயன்கள்
இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத் துடன் இளைத்த உடலைத்தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்ட து.
ஆனால் சித்த மருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல்வேண்டும், இது அதிககசப்பு சுவை கொண்டது.
சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமி ச்சை காயளவு சாப்பிட கொடுக்க உடனே விஷமும் முறிந்து விடும்.
இக்கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறி விடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக் கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும்.
இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலை நோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி, நல்லெண்ணை யை தவிர்க்கவேண்டும்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஸ்ட்ராபெரி


பழங்களில் ஸ்ட்ராபெரி கவர்ச்சியான நிறம் கொண்ட பழமாகும். அதே போல் அற்புதமான சுவையும் சத்தும் உடையது. ஆப்பிள் பழத்தில் உள்ள சத்தை விட ஸ்ட்ராபெரியில் அதிகம் சத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள, பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழச்சாற்றை முகத்தில் தடவினால், சிவப்பு அழகு பெறலாம் என்று கூறப்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இப்பழம் உதவும். இச்சத்து பொருள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இதில் சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் தடுக்கும் திறன் உள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோப்ளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளம் உள்ளன.
இதில் ஆன்டிஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும், சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால் கேன்சர் வருவதை தடுக்கலாம்.
இந்த பழம் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால், பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன. சிவப்பு நிறத்தில் ஜொலிக்க விரும்புபவர்கள், நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெரி பழங்களை ஒரு துணியில் கட்டி, பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.
இந்த சாற்றை, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு, 3 முறை இதுபோன்று செய்தால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தை கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதா கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். நல்ல சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று, பயன்படுத்துவது நல்லது.

திங்கள், 13 ஏப்ரல், 2015

வெயிலுக்கு உகந்த வெள்ளரி !


கோடையை எதிர்கொள்ள வெள்ளரி, ஓர் அற்புதமான நிவாரணி. நீர்ச்சத்து நிறைந்தது இது. 90 சதவிகிதம் நீர் இருப்பதால், தாகத்தைத் தணிக்கும். நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும். குறைந்த அளவே கலோரி கொண்டது வெள்ளரி.
வெள்ளரியில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், தினமும் சாப்பிட்டுவர, வயதான காலத்தில் எலும்புகள் தேய்ந்துபோகாமல் பாதுகாக்கும்.
இதில் பாலிபினால்ஸ் இருப்பதால், புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரை நோய்க்கு எதிராகச் செயல்படுகிறது.
வெள்ளரிச் சாறு, தோல் வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பொலிவாக்கும். வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, கண்ணில் வைத்துக்கொள்வதன் மூலம், உஷ்ணம் தணிந்து, கண் குளிர்ச்சி அடையும். 
சீக்கிரத்தில் செரிமானமாகி, பசியைத் தூண்டக்கூடியது. மலச்சிக்கல், வயிற்றுப் புண், இரைப்பைப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீரகப் பிரச்னைகளைச் சீராக்கும். 
தினமும் இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டுவந்தால், குடல் சுத்தமாகும். விதையுடன் சேர்த்து அரைத்து அருந்துவது நல்லது.
ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.