வியாழன், 9 ஆகஸ்ட், 2012

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்! மனநல ஆலோசகர் லட்சும ணன்: பல திருமண வாழ்க் கை, தளிர் நிலையிலேயே கரு கிப் போவதற்கு காரணம், பர ஸ்பரம் புரிதல் இல்லாமை தா ன். அதனால் தான், காதல் திரு மணமோ, பெரியோர் நிச்சயித் த திருமணமோ, எதுவானாலு ம், “கவுன்சிலிங்’ அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத் திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தி ல், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள் வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்க ளையும், குறைகளையும் வெளிப் படையா க பேசுவதில்லை. தன்னை தியாகியாகவு ம், உதவும் குணமுடைய ஆளாகவும் காட் டிக் கொள்வர். திருமணத் திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத் தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம் பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலை குலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதி கலங்க வை க்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திரும ண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போ து தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத் திற்கு முந்தைய, “கவுன்சிலிங்’ அவசியம். திருமணத்திற்கு பிந்தைய, “கவுன்சிலிங்கில், தாம்பத்தி ம் பற்றிய அலசல் மிக மிக முக்கி யமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்ப டும் தகராறு, பெரிய விளைவு களை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், “செக்ஸ்’ பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பா ர்ப்பை அலசுவோம். “செக்ஸ்’ பற்றி புரிதலே இல்லாமல் இரு ப்பவர்களுக்கு, “கவுன்சிலிங்’கும், பிரச்னைகளைப் பொறுத்து, மரு த்துவத்தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்ப ந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக் காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுகவேண்டும். இதனால், வாழ்க்கை யை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.

செக்ஸ் பிரச்சினையா? மனரீதியா சரி செய்யலாம்!

Posted On Aug 9,2012,By Muthukumar
செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலோனோருக்கு மனரீதியான சிக்கல்களினால் ஏற்படுகின்றன. பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க அதற்கென உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகலாம் அல்லது உளவியல் நிபுணர்களை சந்தித்தும் ஆலோசனை பெறலாம். மனதில் தன்னம்ப்பிக்கையையும், உடல்ரீதியாக பலத்தையும் பெறுவதன் மூலம் பாலியல் ரீதியான சிக்கல்களை தீர்க்கலாம்.
பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.
எஸ்டிடி (sexually transmitted infections) என்பது பெரும்பாலான ஆண், பெண் போன்றவர்களுக்கு ஏற்படும் பால்வினை நோயாகும். உடல் உறுப்புகளில் வலி, புண்கள் போன்றவை இதன் அறிகுறியாகும்.
பிறப்புறுப்பில் புண்கள் சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும்.ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
ஒருவரின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும். ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம் பகு‌தி‌யி‌ல் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும். இ‌தி‌ல் ஒரு ‌சில அ‌றிகு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்று‌க் ‌கிரு‌மிகளாலு‌ம் ஏ‌ற்படலா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்து ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ‌மிகவு‌ம் மு‌க்‌‌கிய‌ம்.
ஒரு சில ஆண்களுக்கு உறவில் ஈடுபடமுடியாமல் தனது துணையை திருப்த்தி படுத்த முடியாத அளவிற்கு இயலாமை ஏற்படும். இது ஹார்மோன் குறைபாடினால் ஏற்படும். எனவே ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்ளலாம். கவுன்சிலிங் மூலமும், ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி மருத்துவமுறையிலும் இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல் ஆர்கஸம் எனப்படும் உச்சக்கட்டம் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுவதில்லை. இதனால் எதையோ இழந்தது போல காணப்படுவார்கள். உளவியல் நிபுணர்களை சந்தித்து சரியான கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால் சிக்கல்களை எளிதில் தீர்க்கலாம். விந்தணுவில் ரத்தம் வெளியாதல், பிறப்புறுப்பில் ரத்தம் வெளியானாலும் ஒருவித அச்சம் ஏற்படும். இதனால் உறவை பற்றி நினைக்கவே அடுத்தமுறை அஞ்சுவார்கள். அதேபோல் பிறப்பறுப்புக்கள் சிறியதாக இருந்தாலும் செக்ஸ் பற்றிய அச்சமும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். இதுபோன்ற உடல்ரீதியான, உளவியல்ரீதியான சிக்கல்களை சிறப்பு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

குங்குமப் பூவின் சிறப்பு!


 Posted On Aug 2,2012,By Muthukumar
விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான்.
இதோ சில குங்குமப் பூ அழகு, மருத்துவக் குறிப்புகள்...
குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.
மேலும், நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ- வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.
ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்' அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

தாய்ப்பாலில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து?

Posted On July 29,2012,By Muthukumar

எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோய் மனித சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எச்.ஐ.வி என்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். தொடக்கத்தில் உடல் ரீதியிலான தொடர்புகளான உடல் உறவு போன்றவற்றால் மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவும் என்று நம்பப்பட்டு, பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட பல வழிகளால் எய்ட்ஸ் பரவுகிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.
தகாத உறவுகளில் ஈடுபடுவோருக்கு பிறப்பது தவிர வேறு ஒரு பாவமும் அறியாத அவர்களின் சந்ததிகளும் எய்ட்ஸ் நோய்க்கு பலியாவது மிக மிக கொடுமையானது. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்பின்போது எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்படாமல் இருந்தாலும், சுமார் 15 சதவீத குழந்தைகள் ஆரம்பகால குழந்தைப்பருவத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்களாம்.
அது எப்படி?
எச்.ஐ.வி. வைரஸ் தாய்ப்பாலுக்குள் பரவும் தன்மையுள்ளது. இதனால் எச்.ஐ.வி. வைரஸால் தாக்கப்பட்ட தாய்மார்களுடைய தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு பிறப்புக்கு பின்னர் எய்ட்ஸ் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
`ஆனால், தாய்ப்பாலில் இருக்கும் ஏதோ ஒரு வேதியியல் பொருளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் வைரஸால் தாக்கப்பட்ட உயிரணுக்களை கொல்லும் திறன் இருக்கிறது. மேலும், மனித நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களை உடைய எலியின் மீதான பரிசோதனையில், எச்.ஐ.வி பரவுதலை தடுக்கும் திறனும் தாய்ப்பாலுக்கு இருக்கிறது' என்னும் ஆச்சரியமான முடிவுகளை முன்வைக்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவிலுள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஏஞ்சலா வால் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரின் இந்த அரிய கண்டுபிடிப்பு, எய்ட்ஸ் நோய்க்கான ஒரு நல்ல தீர்வு விரைவில் கிட்டிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
தாய்ப்பாலின் மருத்துவக் குணம் தொடர்பான முந்தைய ஆய்வுகளில், தாய்ப்பாலுக்கு வைரஸ்களை கொல்லும் திறன் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த வைரஸான எச்.ஐ.வி.யை கொல்லும் திறனும், எச்.ஐ.வி. பரவுதலை தடுக்கும் ஆற்றலும் தாய்ப்பாலுக்கு இருக்கிறதா என்பது பற்றி இதுவரை தெரியாமல் இருந்தது.
இதனைக் கண்டறிய, அமெரிக்க ஆய்வாளரான ஏஞ்சலா வால், மனித எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மற்றும் தைமஸ் திசுக்களை உடைய ஒரு எலியை உருவாக்கினார். அந்த எலிகளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் வாய்வழியாக செலுத்தப்பட்டபோது அவற்றுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது. ஆனால் அதே எலிகளுக்கு எச்.ஐ.வி கலந்த தாய்ப் பால் கொடுக்கப்பட்டபோது எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை.
இதன் மூலம், எச்.ஐ.வி கிருமிகளை கொல்லும் திறன் தாய்ப்பாலுக்கு இயற்கையிலேயே உண்டு என்பது நிரூபணமாகிறது என்கிறார் இந்த ஆய்வினை மேற்பார்வையிட்ட மூத்த ஆய்வாளர் விக்டர் கார்சியா.
தற்போது தாய்ப்பாலில் உள்ள எச்.ஐ.வி. கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்ட அந்த விசேஷமான வேதியியல் மூலக்கூறினை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளதாம். அந்த மூலக்கூறு கண்டுபிடிக்கப்படும் வேளையில், உடல் உறவு மூலம் ஏற்படும் எச்.ஐ.வி தொற்றினைக் கூட தாய்ப்பாலில் இருக்கும் அந்த விசேஷ மூலக்கூறினை வைத்து தடுத்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தாய்ப்பாலுக்கு எச்.ஐ.வி. தொற்றினை தடுக்கும் ஆற்றல் இருக்குமானால் தாய்ப்பால் கொடுக்கப்படும் சில குழந்தைகளுக்கு ஏன் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது?
பிளவுபட்ட முலைக் காம்புகளில் இருந்து குழந்தைகள் பாலை உறிஞ்சும்போது தாயினுடைய ரத்தத்தில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ்கள் குழந்தைகளின் உடலுக்குள் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுபோன்ற மறைமுகமான சில காரணங் களாலும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.க்கு எதிரான மருத்துவப்போர் முழுவீச்சுடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதேசமயம், எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை நாம் மட்டுமல்லாது, நம்மைச் சார்ந்த சமூகத்தினருக்கும் புரிய வைத்து பாதுகாக்க வேண்டும்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

மரபணு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல்!

Posted On July 22,2012,By Muthukumar
`ஒரு விலங்கு அல்லது அதன் உயிரணுவை தொடாமலேயே அந்த விலங்கின் உயிரணுக்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியுமா?' என்றால் `ஓ, கட்டுப்படுத்தலாமே' என்று கோரசாக சொல்கிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள்.
எப்படி என்று கேட்டால், `ரிமோட் கண்ட்ரோல் வைத்துத்தான்' என்கிறார்கள் கூலாக. ரிமோட் கண்ட்ரோல் வைத்து டி.வி., கார் போன்ற மின்சாதனங்களை இயக்க முடியும். ஆனால் உயிரணுக்களை எப்படி இயக்க முடியும்?
உண்மைதான். `ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் ரேடியோ அலைகளை, எலி போன்ற விலங்குகளின் உடலிலுள்ள உயிரணுக்களின் மீது செலுத்தி, அதன் மரபணு செயல்பாடுகளை நம் தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்' என்பதுதான் உயிர்தொழில்நுட்பவியல் உலகில் உலவி வரும் சமீபத்திய ஹாட் செய்தி. இன்னும் சுவாரசியமாக, `ரேடியோ அலைகளைக் கொண்டு உயிரணுக்களின் சில பகுதிகளை உஷ்ணப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட மரபணுவை தூண்டுவதன் மூலம் இன்சுலின் உற்பத்தியை தூண்ட முடியும்' என்று நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
ஆச்சரியமான, ஆனால் அட்டகாசமான இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தியிருப்பவர் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மரபியலாளர் ஜெர்ரி ப்ரைடுமேன்.
இந்த ஆய்வில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிரத்தியேகமான உயிரணுக்கள் எலியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டன. இந்த உயிரணுக்களில், உஷ்ணமடையும் போது திறந்துகொள்ளும் தன்மை கொண்ட TRPV1 என்னும் துளையும், கால்சியம் கிடைத்தால் இன்சுலின் உற்பத்தி செய்யும் மரபணு சுவிட்சும் வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த உயிரணுக்களின் மீது முதலில் ரேடியோ அலைகள் செலுத்தப்பட்டன. இதனால் உண்டான வெப்பத்தால் உயிரணுக்களின் உள்ளே இருக்கும் TRPV1 துளைகள் திறந்து கொண்டன. பின்னர், இந்த துளை வழியாக பாயும் கால்சியம் அயான்கள் இன்சுலின் உற்பத்தி செய்யும் மரபணு சுவிட்சை ஆன் செய்கின்றன. இதனால் இன்சுலின் உற்பத்தி தொடங்குகிறது.
இப்படித்தான், மரபணு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு ரிமோட் கண்ட்ரோலாக ரேடியோ அலைகள் செயல்படுகின்றன என்கிறார் ஆய்வாளர் ஜெர்ரி ப்ரைடுமேன்.
ஓர் உயிரணுவை தொடாமலேயே, ஒளி மற்றும் அல்ட்ரா சவுண்டு கதிர்களை வைத்து அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பது பழைய செய்தி.
ஆனால், `உயிரணுக்களின் உள்ளே இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ரேடியோ அலைகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்' என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பது, உலகில் இதுவே முதல் முறை என்கிறார் ஆய்வாளர் ப்ரைடுமேன்.
அது சரி, உயிரணுக்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த ஒளியும், அல்ட்ரா சவுண்டு கதிர்களும் இருக்கும்போது ரேடியோ அலைகள் எதற்கு?
ஏனென்றால், ஒளி மற்றும் அல்ட்ரா சவுண்டில் இல்லாத பல வசதிகள் ரேடியோ அலைகளில் உண்டு என்பதால்தான்.
உதாரணமாக இந்த ஆய்வில், ரேடியோ அலைகள் ஒரு தசையையோ அல்லது ஒரு உயிரணுவையோ உஷ்ணப்படுத்தாமல், உயிரணுக்களின் உள்ளே இருக்கும் TRPV1 என்னும் குறிப்பிட்ட துளைகளை மட்டும் உஷ்ணப்படுத்துகின்றன.
ஆனால், அல்ட்ரா சவுண்டு கதிர்கள் ஒரு தசை மொத்தத்தையும் சுமார் 42 டிகிரி செல்சியஸ் வரை உஷ்ணப்படுத்துகின்றன. இதனால் உயிரணுக்கள் சேதப்படலாம். அல்லது வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம்.
அதேபோல, ஒளிக் கதிர்களால் ஒரு தசையினுள் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரைதான் ஊடுருவிச் செல்ல முடியும். ஆனால், ரேடியோ கதிர்களால் ஒளியை விட பல மடங்கு அதிகமாக ஊடுருவிச் செல்ல முடியும்.
எதிர்காலத்தில் ஸ்டெம் செல் தெரபி போன்ற உயிர் காக்கும் மருத்துவ தொழில்நுட்பங்களில், ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி மரபணுக்களை தூண்டக் கூடிய ஒரு பிரகாசமான வாய்ப்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெங்காயத்தின் மகிமை!

Posted On July 22,2012,By Muthukumar
ஒன்றுமில்லாத விஷயத்தை `வெங்காயம்' என்று சொல்வது பலரின் வழக்கம். ஆனால் உண்மையில் வெங்காயம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.வெங்காயத்தை ஆங்கிலத்தில் `ஆனியன்' என்கிறார்கள். இது `யூனியோ' என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு `பெரிய முத்து' என்று பொருள்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற வேதிப்பொருளாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், அது நம் கண்ணில் பட்டு கண்ணீர் வரவழைக்கவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் ஒரே தன்மை உடையவை. ஒரே பலனைத் தருபவை.
வெங்காயத்தில் புரதச் சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. எனவே இது நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் கூட பாட்டி வைத்தியத்திலும், நாட்டுப்புற வைத்தியத்திலும் வெங்காயம் முக்கிய இடம் பெறுவது தெரிந்தது. விஞ்ஞானிகளும் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. செரிமானத்துக்கும் உதவுகிறது. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

உங்களது காதலை வெளிப்படுத்தும் வழிகள் – மங்கையக்கு தரும சில டிப்ஸ்

1. கணவன் வேலைக்கு சென்ற பின், ஒரு நாளைக்கு இருமுறைபோன் செய்து விசா ரித்து கொண்டிருப்பதன்மூலம் நீங்கள் அவ ர்களையே நினைத்துக் கொண்டிரு ப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி போன் செய் து கோபமாக எப்போதும் பேசாமல் அன் போடு கொஞ்சிபேசுங்கள். அதற்காக அடிக்கடி போன்செய்து அவர்க ளை கோபப்படுத்தி விடாதீர்கள்.
2. கணவன் காலையில் குளித்து, சட்டை போடும்போது நீங்கள் சென்று அந்த பட் டனை போடலாம். பின் அவர்கள் சாப்பிட வரும்போது அவர்களுக்கு பிடித்த உண வை செய்து வைத்து அவர்களை மகிழ் விப்பதன் மூலம் வெளிப்படுத்தலா ம். மேலும் ஆபிஸ் செல்லும்போது அவர்க ள் கேட்காமல், அவர்களது பையை எடுத்து கொடுத்து டாடா காண்பி க்கலாம்.
3. மேலும் அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் டிபன் பாக்சில், உங்களுக்கு பிடித்த லிப் ஸ்டிக்கை போட்டு ஒரு பேப்பரில் முத்தம் கொடுத்து அவர்களுக்கு அனுப்பலாம்.
4. கிச்சனில் பழங்களால், அதுவும் அவர்க ளுக்கு பிடித்த பழங்களால் “ஐ லவ் யூ” என்று அடுக்கி வைத்துவிடுங்கள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந்து ஏதேனும் எடுத்து வரச் சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாரு ங்கள், அப்போது அவர்கள் படும் மகிழ்ச்சிக்கு அள வே இருக்காது.
5. கணவனை முதலில் பார்த்த அந்த நாளை நினைவில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முதலில் பார்த்த போது என் னென்ன சாப்பிட்டீர் களோ அதை சமைத்து அவர்களுக்கு அந்த நாளை நினைவு படுத்த லாம். இல்லாவிட்டால் அந்நாளன் று இருவரும் சேர்ந்து எங்கு சென் றீர்களோ அந்த இடத்திற்கு அழை த்து சென்று நினைவு கூறலா ம்.
6. டென்சனாக வரும்போது, அவர்களை மகிழ் விக்கும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடி த்த உணவை சமைத்து கொடுத்து, அன்போடு பேசி, வேடிக்கையான செயல்கள் ஏதேனும்செ ய்து அவர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பத ன்  மூலம் தெரியப்படுத்தலாம்.

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍

தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள்.
புதுசா இருக்கட்டும்
எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர் வத்தை அதிகரிக்கும்.
தனிமையில் சந்திப்பு
அலுவலகம் செல்லும் ரகசிய மாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மாலைப் பொழுதில் புதிதாய் ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகா ன ஆடையில் கணவரை கவர் ந்திழுக்கும் வகையில் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்க ளவர் அசந்து போவார். அந்த தருணத்திலேயே காதல் நெருப்பு பற்றி க்கொள்ளும்.
கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்
ருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக வே லையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத்தை அதிகரிக் கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படுத் தும்.
முதல் ஸ்பரிசம்
முதல் இரவில் நடந்த சம்பவங்கள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள் அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக் கும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுறு சுறுப்பான செயல்பாடு
உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார் மோன்களை சுரக்கச்செய்யும் என் கின்றனர் நிபுணர்கள். வேகமாக ஆற்றில் படகில் செல்வது, சுறு சுறுப்பாக வேலை செய்வது. நீந்து வது என உற்சாகமாக செயல்படு ங்கள். புதுவித த்ரில் ஏற்படும் என் கின்றனர் நிபுணர்கள்
சில நாள் விடுமுறை
தினமும் உறவு என்பது போராடி த்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட நா ளில் அதை வைத்துக்கொள்ளலா ம் என தீர்மானியுங்கள். அது வரை தீண்டல், விளையாட்டு, சின்ன சின்ன முத்தம் என எதிர் பார்ப்பை எகிற வைக்கலாம். அதற்காக ஒரேடியாக லீவ் தேவையில் லை என்பது அவர்களின் அறிவுரை.

வியாழன், 19 ஜூலை, 2012

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

Posted On July 19,2012,By Muthukumar
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.
உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்' என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்கும் முகவாதம்


அழகான முகம் திடீரென்று ஒருபக்கம் இழுத்துக்கொள்ளும், வாய் கோணல் ஆகிவிடும். கண் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சரியாக மூட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற் பட்டாலே முக வாதம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அதிகாலையில் பனியில் வெளி யில் செல்வோரின் பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகி ன்றனர். காது வழியாக ஊடுரு வும் பனி, உள்ளே சென்று முகத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்தம் தடைபட்டு முகத்தின் ஒரு பகுதி மட்டும் இழுத்துக்கொள்கிறது.
இந்நோய் குளிர் காலத்தில் மட்டும் மனிதர்களைத் தாக்கும் சீசன் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள் மாதவிடாய் காலங் களில் உடல் பலவீனமாகும்போது முகவாதம் ஏற்படும்.
நகர்ப்புறங்களில் பனியில் வேலைக்குச் சென்று திரும்புவோரையு ம், கிராமங்களில் மலையடிவார ங்களில் உள்ள மக்களையும் இது தாக்குகிறது. ஆண்களை விட பெண்களையே இந்நோய் அதிகம் பாதிக்கிறது. பனியில் பஸ்சிலோ ரயிலிலோ, பயணம் செய்யும் போது, பனிகாற்று ஊசி போல் காதில் பனி ஊடுருவாத வகையில் ‘மப்ளர்’ கட்டிச் செல் ல வேண்டியது அவசியம்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள சிறு குழந்தைகளுக்கு கூட முகவாதம் வரும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக இரத் தப்போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடையும் காலங்களில் முக வாதம் எளிதில் தாக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்ணை மூட இயலாமல் போகும். உணவு சாப்பிடும்போதோ, திரவ ஆகாரங் கள் சாப்பிடும்போதோ, அனைத்தும் வெ ளியே கொட்டிவிடும். வேலைக்குச் செல் லும் பெண்கள் பலரும் காலை, மாலை நேரங்களில் தலைக்கு ‘மப்ளர்’ கட்டியபடி செல்வது நல்லது என்கின்றனர் மருத்து வர்கள்.
குளிர் காலத்தில் ஆக்சிஜன் குறைவாகக் கிடைப்பதால் அதிகாலையில் முறையா ன உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் பெண்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண் டும்.
கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு முகவாதத்தால் பாதிக்கப் படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறும் மருத்து வர்கள் இந்த நோயை 15 நாட்களுக்குள் குணப்படுத்திவிட முடியும் என்று கூறியுள்ளனர். உடலில் பலம் குறைவதால் அங்கத்தில் ஏற் படும் ஒரு குறைபாடு தான் இது. எனவே சரியான முறையில் சிகிச்சை பெற் றால் பூரணமாக குணமடைந்து விட லாம் என்று கூறியுள் ளனர்.
முகவாதம் வந்தவர்கள் குளிர்ச்சியா ன உணவுப்பொருட்களை தவிர்த்து விட வேண்டும். ஐஸ்கிரீம், ப்ரிட் ஜ்ஜில் வைத்த உணவுப்பொருட்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அதேபோல் தயிர் உள்ளிட்ட புளிப்பான உணவுப்பொருட்களை தவிர்க்க வேண் டும், அதேபோல் மஞ்சள் பூசணிக்காயை உண்ணக்கூடாது என்றும் அவர்கள் கூறி யுள்ளனர்.
முக வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை போன்ற இலைக் காய் கறிகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. மே லும் அரிசி உணவுகளை விட கோதுமை யில் செய்த உணவுப்பொருட்களை உட் கொள்ளலாம். அதேபோல் எருமைப்பா லை விட பசுவின் பாலை உட்கொள்ள லாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எந்த சூழ்நிலையிலும், மது, சிகரெட் போன்றவைகளை எந்த சூழ் நிலையிலும் தொடவே கூடாது. அதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும் என்பதும் நிபுணர்களின் அறிவுரையாகும்.

`அப்படியே’ சாப்பிடலாம்!

Posted On July 15,2012,BY Muthukumar

`ஆப்பிள்' போன்ற பழங்களை நாம் அப்படியே சாப்பிடுகிறோம். `பேக்' செய்யப்பட்டு வரும் சில உணவுப்பொருட்களையும் அதைப் போல பிரிக்காமல் `அப்படியே' சாப்பிடலாம் என்றால்?
இந்த விந்தையான யோசனையை நனவாக்கிவிட்டார்கள் சில விஞ்ஞானிகள். உணவுப்பொருளுடன் சேர்த்து அப்படியே சாப்பிடக் கூடிய `புட் பேக்கேஜிங் மெட்டீரியலை' அவர்கள் தயாரித்திருக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள, உண்ணக்கூடிய இந்த பேக்கேஜிங், `விக்கிசெல்ஸ்' எனப்படுகிறது. பழங்கள் எப்படி அவற்றின் வெளிப்புற அடுக்கால் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவோ அதை `காப்பி' அடித்து இந்தப் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹார்வர்டு பேராசிரியர் டாக்டர் டேவிட் எட்வர்ட்ஸ், ``இயற்கையானது எவ்வாறு உணவுப்பொருட்களை `கவர்' செய்து பாதுகாக்கிறதோ அதே முன்மாதிரியில் நாங்கள் இந்த நுட்பத்தை உருவாக்கியிருக்கிறோம்'' என்கிறார்.
இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், யோகர்ட், ஜூஸ் டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், ஐஸ்கிரீம் கப்கள் போன்றவற்றை ஆய்வாளர்கள் தயாரித்திருக்கின்றனர். உண்ணக் கூடிய அடுக்காக, உணவு அல்லது திரவத்தை `விக்கிசெல்ஸ்' மூடியிருக்கிறது.
பழங்களைப் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள கன்டெய்னர்கள், பாசியும், கால்சியமும் சேர்ந்த ஒரு பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனுடன் குறிப்பிட்ட கன்டெய்னரில் உணவுப்பொருளின் துணுக்கு களும் சேர்க்கப்படுவதால், `உள்ளிருக்கும்' பொருள் போலவே வெளியடுக்கும் ருசிக்கிறது. இந்த பேக் கேஜிங் மெட்டீரியலை, திட, திரவப் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.
சரி, என்னதான் உண்ணக் கூடிய பேக்கேஜிங் என்றாலும், அதில் படியும் தூசி போன்ற மாசுகளால் பாதிப்பு ஏற்படதா என்று நீங்கள் கேட்கலாம்.
ஏன் கவலைப்படுகிறீர்கள்? பழத்தைப் போல இதையும் குழாய் நீரில் கழுவிவிட்டுச் சாப்பிட வேண்டியதுதானே என்கிறார்கள் இதை உருவாக்கிய புதுமையாளர்கள்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

பேசும் செடிகள்!

Posted On July 8,2012,By Muthukumar
செடிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை அவ்வாறு ஆடுவதன் மூலம் ஒன்றுக்கொன்று பேசுகின்றன என்ற அதிசயத் தகவலைக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தாவரங்கள் ஒலிக்கு `ரெஸ்பான்ஸ்' காட்டுவது மட்டுமல்ல, தாங்களே சில ஒலிகளை வெளியிடவும் செய்கின்றன என்கிறார்கள் இவர்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர் களை பயன்படுத்தினர். அதன்மூலம் சோளப் பயிர்கள் தமது வேர்ப் பகுதியிலிருநëது வெளியிட்ட `கிளிக்' ஓசையைக் கேட்டனர்.
காற்றில் செடிகள் தமது விருப்பம் ஏதுமில்லாமல் இயல்பாக ஆடுவது போலத் தோன்றினாலும், உண்மையில் அவை அப்போது தொடர்ந்து `உரையாடி'க் கொண்டு இருக்கின்றனவாம்.
தாவரங்கள் ஏற்படுத்தும் அதே அலைவரிசையிலான ஒலியைத் தொடந்து ஏற்படுத்தியபோது, தாவரங்கள் அதை நோக்கி வளரத் தொடங்கியிருக்கின்றன. தாவரங்கள் பொதுவாக வெளிச்சம் நோக்கி வளரும் என்று நமக்குத் தெரியும். ஒலியும் அவற்றை ஈர்க்கிறது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.
எக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிடும் தகவல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, முட்டைக்கோஸ் தாவரமானது ஒருவித வாயுவை வெளியிட்டு, வெட்டுக்கிளிகள், செடிகளை வெட்டும் கத்திரிகள் குறித்து பிற தாவரங்களை எச்சரிக்கின்றனவாம்.
மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காத ஒலி மொழியில் செடிகள் பேசிக்கொள்கின்றன என்பதற்கு இவ்வாறு உறுதியான ஆதாரம் கிட்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொழி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது!

புதன், 4 ஜனவரி, 2012

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!


சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் பார்த்து பார்த்து செய்தார்கள்.
ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்த பெண் அம்மாவைக்கட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தார். ”எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார். வெளி யே எட்டிப்பார்த்தால் யாரைப்பார்க்கிறாய் என்கிறார்.என்னுடைய செல்போனை எடுத்து யார்யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார் க்கிறார், வாழ்க்கையை நினைத் தால் பயமாயிருக்கிறது’’
மேலே சொல்லப்பட்ட்து கொஞ்சம் தான்.தன்னை விட அழகான மனை வி அமைந்த்தால் சந்தேகம் ஏற் பட்டு மன நோயாளி யானதை சினி மாவில் பார்த்திருக்கிறோம். நிஜத் திலும் உண்மையில் மனநோய் ஏற் படும் அளவுக்கு பிரச்சினையை தரு ம் ஒன்று தான் இந்த சந்தேகம். தீவி ரமான உணர்ச்சிப்போராட்ட்த்தை தரும் பயங்கரம் இது.
ஆண் மட்டுமல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு.இரு பாலருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழ கான மனைவி,அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணம ல்ல! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.ஒரு வகை மன நோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.
தனது பாலியல் திறன் மீது அவ நம்பி க்கை உள்ளவர்கள், உண்மை யிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந் தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள். பருவ வயதில் திருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக் குழப்பும்.சில விஷயங்களை இவர்களே பார்த்திருப்பார்கள்.கடந்த கால சம்பவ ங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.
பாலியல் குறைபாடு உள்ளவர்கள் கூட தனது இணை தனக்கு மட் டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.பல எண்ணங்கள் தவறு என்றாலும் அவர்க ளது மனம் படும்பாடு கொடூரமான அனுபவமா க இருக்கும் என்கிறார் கள். சந்தேகமும் ,பொறா மையும்,கோபமும் அதி கரிக்கும்போது பாலியல் உணர்வும் மூர்க் கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.
பலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம்.உணர்ச்சி அள வில் அதிகம் பாதிக்கப்படுவது சந்தேக புத்தி உள்ளவர்கள்தான். அவர்களது கணவனோ,மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.ஆனால் கலாச்சாரம் சார் ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவ னைப் பெற்ற பெண் அதிகளவு பாதி க்கப்படுகிறார்.
கொலை செய்யும் அளவுக்கு,  தற்கொலை செய்து கொள்ளும் அளவு க்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு.கவனமாக கை யாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கி னால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடி யும்.