வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஆண்- பெண் குறிகளில் உள்ள‍ புண்களை / வெள்ளைப்படுதலை குணமாக்கும் எளிய மருந்து!




ஆண்-பெண் குறிகளில் உண்டாகும் புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது. மேலும், பெண்களின் வெள்ளைப் படுதல் பிரச்சனைக்குத்தீர்வாக
இந்த எளிய மருந்தை பயன்படுத்த‍லாம் அதாவதுவெள்ளைப்படுதலால் பாதிக்க‍ப்படும் பெண்கள், காலை-மாலை இருவே ளையும் 1/2 தேக்கரண்டியளவு 1 வார காலத்திற்கு உட்கொண்டு வந்தால் வெள்ளைப்படுதல் விரைவாக குண மடைந்து சுகம் பெறுவர்
அத்தகைய சிறப்பு வாய்ந்த எளிய மருந்து என்ன‍ தெரியுமா? அது மகிழம்பூ 100 கிராம், பாதாம் பிசின் 100 கிராம், மஞ்சள் 100 கிராம் ஆகி யவற்றை சேர்த்துத் தூளாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தினால் நிரந்தர தீர்வு உண்டாகும்.

தக்காளியால் உங்கள் அழகு எப்படி மேம்படுகிறது?


உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பட்டியலிடுங்கள் என்றால், கண்டிப்பாக அதில் தக்காளிக்கு இடமிருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் காய்கறி தான் தக்காளி. அதனை சமையலில் சேர்த்தால் உணவிற்கு ருசி கொடுக்கும். சாறு நிறைந்த இந்த தக்காளியை அப்படியே கூட விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். இது மட்டுமா? இதனை சாறு எடுத்து பருகவும் கூட பலரும் விரும்புவார்கள். பழச்சாறு கடைகளில் கிடைக்கும் வெகு சில காய்கறி ஜூஸ்களில் இதுவும் ஒன்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதையெல்லாம் தாண்டி தக்காளி சூப்பும் மிகவும் பிரபலம். ஹோட்டல்களில் உள்ள மெனுக்களில் தக்காளி சூப் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. இப்படிப்பட்ட தக்காளியில் பலவித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனால் நாவிற்கும் மட்டும் ருசி சேராமல், உட்புற உடலுக்கும் பலவித ஆரோக்கியங்கள் கிடைக்கும். அதை பற்றி பேச வேண்டுமானால் தனியாக ஒரு கட்டுரையே
எழுதலாம். சரி அவ்வளவு தான் இதன் பயன் என்றால் அது தான் இல்லை. உங்கள் சருமத்திற்கும், அழகை மேம்படுத்துவதற்கும் இதனை பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சாறு மிக்க இந்த தக்காளிப்பழம் உங்கள் அழகின் மீது பல மாயங்களை நிகழ்த்துகிறது. அதற்கு காரணம், சரும பிரச்சனைகளை நீக்கி அதனை பளபளக்க வைத்திடும் லைகோபைன் என்ற பொருளை ஊக்குவிக்க தக்காளி உதவிடும். இதுப்போக சருமத்தை பளிச்சென, பிரகாசமாக மற்றும் இறுக்கமாக வைத்திருக்கவும் தக்காளி உதவுகிறது. உங்கள் கூந்தலுக்கு அதனை இயற்கை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் மின்னும். தக்காளியினால் உங்கள் அழகு எப்படி மேம்படும் என்பதை பார்க்கலாமா…. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிப்பதோடு மட்டுமல்லாது, சருமத்திற்கும் பல வகையில் உதவுகிறது தக்காளி. சொல்லப்போனால், தக்காளி சாறு அல்லது ஒரு தக்காளி துண்டை உங்கள் சருமத்தின் மீது தடவினால், உங்கள் சரும நிறம் சமப்படுத்தப்பட்டு, நாளடைவில் மின்னத் தொடங்கி விடும். தக்காளியில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், உங்கள் சருமத்தை பளிச்சிட வைக்க அது உதவிடும். பல சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் காண்பதற்கு தக்காளி விதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். தக்காளியில் உள்ள சில பொருட்கள், வயதை ஏற்றும் செயல்முறையை குறைக்க உதவும். அதேப்போல், இயக்க உறுப்புகளுடன் போராடவும் உதவிடும். தோல் அழற்சி மற்றும் சிரங்கு ஆகியவற்றை குறைக்க இந்த எண்ணெய் உதவிடும். பாதிக்கப்பட்ட சருமத்தை மீட்கவும் இது உதவும். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ வளமையாக உள்ளதால், பருக்களை குணப்படுத்தும் ஆயின்மெண்ட் மற்றும் கிரீம்களில் அது பயன்படுத்தப்படுகிறது. அதனால் உங்களுக்கு பருக்கள் இருந்தால், உங்கள் சருமத்தின் மீது தக்காளி சாறை நேரடியாக தடவலாம். தினமும் 4-5 டீஸ்பூன் தக்காளி பேஸ்ட்டை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பயன்படுத்தி வந்தால், சூரிய வெப்பத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்படலாம் என பல அழகு வல்லுனர்கள் நம்புகின்றனர். உங்கள் சருமம் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றால், பாதிக்கப்பட்ட இடத்தில் தக்காளியைத் தடவுங்கள். பொடுகு தொல்லை என்பது நம் தலை முடிக்கு வந்த சோதனையாகும்; குறிப்பாக குளிர் காலத்தில். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தக்காளி சாற்றை எடுத்து தலைச் சருமத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். நல்ல பலனைப் பெற வேண்டும் என்றால், இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது தடவிடுங்கள். சருமத்தை மென்மையாக்க, பாதிக்கப்பட்ட இடங்களில் மசாஜ் செய்ய தக்காளி எண்ணெய்யை பயன்படுத்தலாம். அப்படி மசாஜ் செய்து விட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் மசாஜ் செய்த இடத்தை கழுவுங்கள். முக க்ரீம்களிலும் ஸ்க்ரப்களிலும் கூட தக்காளி எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சருமம் மென்மையாக இருக்கும். முகத்தில் உள்ள துளைகளை சுத்தப்படுத்த, 3-4 சொட்டு தக்காளி சாறை ஒரு டீஸ்பூன் தண்ணீருடன் சேர்த்து, பஞ்சுருண்டையை கொண்டு முகத்தில் தடவுங்கள். இந்த கலவையை கொண்டு உங்கள் சருமத்தின் மீது மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அதே 10-15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள துளைகளின் அளவு நாளடைவில் குறையத் தொடங்கும். பருக்களை குறைப்பது இப்போது சுலபமாகி விட்டது. தக்காளியை பாதியாக அறுத்து, உங்கள் முகத்தின் மீது தடவும். உங்களுக்கு பருக்கள் பிரச்சனை இருந்தால், தக்காளியின் தோலை உரித்து, அதனை பிசைந்து, அந்த சாற்றை சருமத்தின் மீது தடவி அதை ஒரு மணிநேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பின் முகத்தை கழுவி விட்டு காய வையுங்கள். இந்த இயற்கை பேக்கை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் சூரிய ஒளியால் உண்டான கருமை நிறம் ஆகியவற்றை நீக்கலாம். மென்மையான சருமம் வேண்டும் என்றால், தக்காளி சாற்றை தேனுடன் கலந்து கெட்டியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகம் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பின் அப்படியே ஒரு 15 நிமிடங்கள் அதை விட்டு விடவும். பின் தண்ணீரில் அதை கழுவிக் கொள்ளவும். பளபளக்கும் மென்மையான சருமத்தை நீங்கள் பெறப் போவது உறுதி.

வெங்காயத்தில் உள்ள‍ ஐம்பது (50) மருத்துவ குணங்கள்



வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், அதாவது எந்த பொருளோடு சேர்த்தால்
என்னென்ன பலன்கள் கொடுக்கும் என்பதை இங்கே பார்ப்போமா?
  • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்,பித்த ஏப்பம் மறையும்.
  • சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விடகாதுவலி, குறையும்.
  • வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்துசூடாக்கி இளம்சூட்டில் காதில் விட,காது இரைச்சல் மறை யும்.
  • வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும்நீங்கும்.
  • வெங்காயநெடி சில தலை வலிகளைக் குறைக்கும் . வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்புநீங்கும்
  • வெங்காயத்தைச்சுட்டு, சிறிதுமஞ்சள், சிறிது நெய்சேர்த்து,பிசைந்து மீண்டும் லேசாக சுட வைத்து உடையாத கட்டிகள்மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
  • வெங்காயச் சாறு சிலவயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல்குறையும்.
  • வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல் வலி, ஈறுவலி குறையும்.
  • வெங்காயத்தை சமைத்து உண்ண உடல்வெப்ப நிலை சமநிலை ஆகும். மூலச்சூடுதணியும்.
  • வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
  • வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பி ட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பி ட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
  • படை, தேமல் மேல் வெங் காயச்சாற்றை பூசிவர மறை ந்துவிடும்.
  • திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக் கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
  • வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்ல து வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சா ப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
  • வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
  • பனைமரபதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப்போட்டு சூடுபடுத்தி குடித்து வரமேகநோய் நீங்கும்.
  • வெங்காயம், அவரைஇலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிடமேகநோய் குறையும்.
  • வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்துள்ளது. எனவேகுண்டானவர்கள் தாராளமாகவெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
  • பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் க லந்து சாப்பிடுவது நல்லது
  • வெங்காயம் வயிற்றிலுள் ளசிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரண த்துக்கும் உதவுகிறது.
  • வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
  • தொடர்ந்து புகைப்பிடிப்ப வர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வரநுரையீரல் சுத்தமாகும்.
  • வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயுகாரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
  • நறுக்கிய வெங்காயத்தைமுகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
  • வெங்காயச் சாற்றோடு சிறி து உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக் கண் நோய் சரியாகும்.
  • வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்துகண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
  • ஜலதோஷநேரத்தில் வெ ங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
  • வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போடஏற்படும் தொண்டை வலி குறையும்.
  • பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இத னால் விஷம் இறங்கும்.
  • ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருகசிறுநீர் கடுப்பு, எரிச்சல்நீங்கும்.
  • வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இட த்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக் டரிடம் செல்லலாம்.
  • வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்கமூலநோய் குணமாகும்.
  • காலரா பரவியுள்ள இடத் தில் பச்சை வெங்காயத் தை மென்றுதின்ன காலரா தாக்காது.
  • ஒருபிடி சோற்றுடன் சிறிதுஉப்பு, நான்கு வெங்கா யம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலை யில் வைத்து நகச்சுற்றுள் ள விரலில் காலை,மாலை வைத்துக்கட்ட நோய் குறை யும்.
  • சிறிய வெங்காயத்தில்இன்சுலின் உள்ளது. நீரிழி வு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்த லாம்.
  • தலையில் திட்டுத்திட்டாகமுடி உதிர்ந்து வழுக்கைவிழுந்திருந்தால் சிறு வெ ங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.
  • காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச்சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
  • வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய்குறையும்.
  • வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிடவாதநோய் குறையும்.
  • தேள்கொட்டிய இடத்தில்வெங்காயத்தை நசுக்கி த் தேய்க்க விஷம் இறங்கும்.
  • வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வர தாது பலமாகும்.
  • வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
  • தினமும் மூன்று வெங்கா யம் சாப்பிட்டுவர பெண்க ளுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
  • வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட,மலச்சிக்கல் குறையும்.
  • வெங்காயத்தை அரைத்து முன்நெற்றி, பக்க வாட்டு நெற்றியில் பற்றுப் போடதலைவலி குறையும்.
  • மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ள வர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
  • சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரை க்கும்.
  • வெங்காயத்தை ஒரு மண் டலம் தொடர்ந்து சாப்பிட் டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகு ம்.
  • வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைக ள் விரும்பி சாப்பிடுவர்.ஊட்டச்சத்து கிடைக்கும்.
குறிப்பு 
மேற்குறிப்பிட்டுள்ள‍ முறைகளில் ஏதாவது ஒன்று அதில் ஒன்றிற்கு மேற்பட்ட‍வற்றிலோ சிலருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட வாய்ப்புண்டு அத்த‍கையவர்கள் சிறிது எச்ச‍ரிக்கையுடன் செயல்படுவது நல்ல‍து.

குழந்தை பெறாத பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா?



பொதுவாக குழந்தைப்பெற்ற‍ பெண்களின் மார்பங்களில் இருந்து பால் சுரப்ப‍து வாடிக்கைதான். ஆனால்
குழ‌ந்தைப் பெறாத சில பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் சுரக்குமா என்றால் பால் சுரக்கும் என்ப தே பதில்
இதற்கு காரணம் பால் சுரக்கும் செல்கள் பிட்யூ ட்டரி சுரப்பி இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypo thalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப்படுவ தால் ஏற்படும் நிகழ்வே இது.

இது ஏன் நிகழ்கிறது அதற்கான காரணங்கள் என்ன?
பெண்களின் மார்பங்களில் இருக் கும் பிட்யூட்டரி என்ற சுரப்பியில் ஏதாவது கட்டிகள் இருந்தாலோ அல்ல‍து   தைராய்டு சுரப்பியில் ஏற்படும்மாற்றங்க ளாலோ (அ) மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற் படும் பக்க‍விளைவுகளாலும் பின் விளைவுகளாலும் இது நிகழும்
மேலும் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொள்ளும் பெண்களின் சிலரது மார்பகங்களில் இதுபோல பால் கசிய வாய்ப்புக்கள் அதிகம் என் கிறது மருத்துவ உலகம்

புதன், 7 ஜனவரி, 2015

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்து



தலவிருட்சங்கள் தரும் பலன்கள் – வஞ்சிக்கொடி
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் தல விருட்சங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.  குறிப் பாக தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த புராணக் கால கோயில்கள் அனைத்திலும் பல்வேறு வகையா ன மரங்கள் தலவிருட்சங்களாக பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இவை வெறும் மரங்களல்ல; கொடிய நோய்களை குணமாக்கக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதனாலேயே இந்த மரங்கள் தெய்வீக தன்மை கொண்டிருக்கின்றன.
பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்று நோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்று ம் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என் று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத் தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது . சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்த வல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கு ம் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும். வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளு க்கும்,  எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என் று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார் . இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மே ற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப் பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப் பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக் கூடி ய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக் கப்பட்டுள்ளது.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறு நீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப் படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்டகாய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரிய ம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கச ப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. ஆலமரத் தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகி ன்றன.

தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத் தில் சில முண்டுகள் தெரிகின்றன.  வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும். வேதத்தில், ‘தன்வந்திரி மகரிஷியின் இரண்டு கைக ளாக சீந்தில் கொடி உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மூலிகைச் செடிகளில் சீந்தில் கொடி முதன்மையான இடத்தில் உள்ளது. இதை மெய்ப்பிக்கு ம் வகையில் ராமாயண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட லாம். “ராமனுக்கும், ராவணனுக்கும் கடும் போர் நடந் து கொண்டிருக்கிறது.
ராமர் தனது படையில், சுக்ரீவன் தலைமையிலான குரங்குகளைப் பெருமளவில் பயன்படுத்தினார். இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டன. தமது படையில் இறந்துபோன குரங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று ராமன் விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற தேவேந்திரன் அங்கே வந் து அமுதத் துளிகளை பூமியில் தெளித்தான். மண்ணி ல் அந்த அமுத நீர் பட்ட இடங்களிலெல்லாம் சீந்தில் கொடி முளைத்து வளர்ந்தது. அந்த சீந்தில் கொடியின் காற்று பட்டதும் இறந்து கிடந்த குரங்குகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுந்தன. இதைக்கண்டு ராமன் மகிழ்ச்சி அடைந்தான்.
இதனால்தான் சீந்தில் கொடியை சாகா மூலிகை என் றும் சித்தர்கள் அழைத்தார்கள். மரணத்தை வெல்லக் கூடிய மூலிகைகளில் சீந்தில் கொடியும் ஒன்று. சீந்தில் கொடி என்கிற வஞ்சிக் கொடியை,  திருக்கரு வூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் தல விருட்சமா கத் திகழ்கிறது. இந்த ஒரு கோயிலில் மட்டும் தான் வஞ்சிக் கொடி தலவிருட்சமாக இருப்பதாக அறிய முடிகிறது. கோயில் பிராகாரத்தில் வன்னி மரத்தில் வஞ்சிக்கொடி படர்ந்திருப்பதை காணலாம். வஞ்சிக்  கொடி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

இந்த வஞ்சிக்கொடியை உட்கொண்டு கடுவெளி சித்தர் பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். குலோத்துங்க  சோழன் ஆட்சி காலத்தில் கடும் பஞ்சத்தில் இருந்து மக்களைக் காத் தவர் இந்த கடுவெளி சித்தர். திருக்கருவூரில்தான் பிர ம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கினான் என்று கோயில் தலப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர்,

“தொண்டெலாமலர் தூவியேத்த நஞ்சு
உண்டலாகுயிர் ஆய தன்மையர்
கண்டனார் கருவூருள் ஆனிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே”
                                                        – என்றும்
“தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி வெய்த வில்லியர்
காவலர் கருவூரு னானிலை
மூவராகிய மொய்ம்பரல்லரே!’’
- என்றும் பாடியுள்ளார்.
திருக்கருவூர் திருத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொ ண்டது. பலருக்கு முக்தியளித்த தலம். கருவூர் சித்தர் ஜீவசமாதியடைந்து அருவமாக இறைவனுக்கு பூஜை செய்து வருவதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்ப டுகிறது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்த பிரம் மன் ஒருமுறை சற்று கண் அயர்ந்தநேரம் பார்த்து காமதேனு பசு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம். இதனால்தான் திருக்கருவூருக்கு கருவூர், கற்ப புரி என்றும் இறைவனை பசுபதீஸ்வரர் என்றும் அழை க்கிறார்கள்.

தேவர்கள், சுக்கிரன், முசுகுந்த சோழ மன்னன், பிரம்ம ன், திக்குப்பாலர்கள் இறைவனை பூஜித்த தலம்தான் திருக்கருவூர். விபண்டன் என்ற வேடனுக்கும் எறிபத்த நாயனாருக்கும், புகழ்ச் சோழ நாயனாருக்கும் இறைவ னால் முக்தி அளிக்கப்பட்ட தலமாகும். கருவூர் திருச்சி யில் இருந்து கோவை செல்லும் சாலையிலும், ரயில் மார்க்கத்திலும் உள்ளது. திருச்சியில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ளது. சாகா மூலிகையான வஞ்சிக் கொடியை தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழி பட்டு பேரருள் பெறுவோம்.

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்…


பலர் உடலை அழகாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். அதில் அழகைப் பராமரிக்கிறேன் என்று பெரும்பாலானோர் செய்வது அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பது தான். அப்படி செலவு செய்து என்ன பயன். முகம், கை, கால் மட்டும் அழகாக வெள்ளையாக இருந்தால் போதுமா, முழங்கை அழகாக இருக்க வேண்டாமா? அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!! பிறகென்ன அழகு என்று பலர் நினைக்கும் போது, முகம், கை, கால்களை மட்டும் நினைத்து, அதற்கு மட்டும் அதிக பராமரிப்புக்களை கொடுக்கிறார்கள். முழங்கைகைய கண்டு கொள்வதே இல்லை. இதனால் பல இடங்களில் அதிகம் ஊன்றி, இறந்த செல்கள் தேங்கி முழங்கை கருப்பாகவும், மென்மையின்றியும் அசிங்கமாக இருக்கிறது. அழகு என்று வரும் போது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து பகுதிகளுமே சரிசமமான நிறத்தில் இருக்க வேண்டும். ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…
இதுவரை நீங்கள் உங்கள் முழங்கைக்கு எந்த ஒரு பராமரிப்பும் கொடுத்ததில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் கொண்டு அவ்வப்போது முழங்கைக்கு பராமரிப்பு கொடுங்கள். இதனால் விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்குவதுடன், அவ்விடமும் மென்மையாக இருக்கும். சரி, இப்போது கருமையாக இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க என்ன செய்வதென்று பார்ப்போமா…! 1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெள்ளையாகும். சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும். பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி, முழங்கை மென்மையாக இருக்கும். 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலநுது, முழுங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, காட்டன் கொண்டு துடைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முகத்தைப் பளபளப்பாக்க எப்படி கடலை மாவைப் பயன்படுத்துகிறோமோ, அதேப் போல் முழங்கையை பளபளப்பாக்கவும் கடலை மாவைப் பயன்படுத்தலாம். அதற்கு கடலை மாவை, தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், கடலை மாவை எலுமிச்சை சாற்றில் கலந்து பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை தேனுடன் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். மஞ்சளுக்கு சரும கருமையை போக்கும் சக்தி உள்ளது. எனவே மஞ்சள் தூளை, தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிது நீரால் முழங்கையை 2 நிமிடம் தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனாலும் நல்ல மாற்றம் தெரியும்.