திங்கள், 13 ஏப்ரல், 2015

வெயிலுக்கு உகந்த வெள்ளரி !


கோடையை எதிர்கொள்ள வெள்ளரி, ஓர் அற்புதமான நிவாரணி. நீர்ச்சத்து நிறைந்தது இது. 90 சதவிகிதம் நீர் இருப்பதால், தாகத்தைத் தணிக்கும். நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும். குறைந்த அளவே கலோரி கொண்டது வெள்ளரி.
வெள்ளரியில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், தினமும் சாப்பிட்டுவர, வயதான காலத்தில் எலும்புகள் தேய்ந்துபோகாமல் பாதுகாக்கும்.
இதில் பாலிபினால்ஸ் இருப்பதால், புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரை நோய்க்கு எதிராகச் செயல்படுகிறது.
வெள்ளரிச் சாறு, தோல் வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பொலிவாக்கும். வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, கண்ணில் வைத்துக்கொள்வதன் மூலம், உஷ்ணம் தணிந்து, கண் குளிர்ச்சி அடையும். 
சீக்கிரத்தில் செரிமானமாகி, பசியைத் தூண்டக்கூடியது. மலச்சிக்கல், வயிற்றுப் புண், இரைப்பைப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீரகப் பிரச்னைகளைச் சீராக்கும். 
தினமும் இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டுவந்தால், குடல் சுத்தமாகும். விதையுடன் சேர்த்து அரைத்து அருந்துவது நல்லது.
ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக